தற்போது நடைபெற்ற முடிந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பெங்களூர் அணி சிறப்பான வெற்றி
இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே பெங்களூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் சிரமப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் நன்றாக விளையாட மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதில் அதிகபட்சமாக துருவ் ஜூரேல் 23 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 47 பந்துகளை எதிர்கொண்டு 75 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணி, ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடியது. 33 பந்துகளை எதிர்கொண்ட பில் சால்ட் 65 ரன்கள் மற்றும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். மேலும் இறுதிக்கட்டத்தில் மூன்றாவது வரிசை வீரர் படிக்கல் 28 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி இறுதியாக ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 17.3 ஓவரில் 175 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து ஆர்சிபி கேப்டன்
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் ராஜ் பட்டிதார் வெற்றி குறித்து கூறும் போது “இந்த போட்டி உண்மையிலேயே பார்க்க அற்புதமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை அற்புதமாக செயல்படுத்தினார்கள். 170 ரன்கள் என் மனதில் உள்ள இலக்கா? என்று நான் நினைக்கவில்லை. பவர் பிளேவில் நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு அப்போது எளிதாக இல்லை. 150 முதல் 170 ரன்கள் வரை வெற்றி இலக்காக கொண்டிருந்தோம்.
இதையும் படிங்க:நாங்க பேட்டிங் செஞ்சப்போ எங்களுக்கு இருந்த பிரச்சனை.. ஆர்சிபி அணிக்கு இல்லை.. அதான் ஈசியா ஜெயிச்சுட்டாங்க – சஞ்சு சாம்சன் பேட்டி
எங்கள் பந்துவீச்சாளர்களிடமிருந்து எனக்கு நிறைய நம்பிக்கை கிடைக்கிறது. அவர்கள் எந்தவிதமான மேற்பரப்பு மற்றும் எந்த நிலையிலும் பந்து வீசுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாகவும் மற்றும் மிகப்பெரிய நம்பிக்கையும் கொடுக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பில் சால்ட் பேட்டிங் செய்த விதத்தை நான் மிகவும் ரசித்தேன். அதே நேரத்தில் விராட் கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்த விதமும் அற்புதமாக இருந்தது. நாங்கள் எப்போதுமே நேர்மறையான மற்றும் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் “என்று பேசி இருக்கிறார்.






