ஐபிஎல் 2025

4-4.. இதுவரை எந்த அணிக்கும் நடக்காத வினோத சோகம்.. டெல்லிக்கு நடந்த பரிதாபம்.. முழு தகவல்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இதுவரை எந்த அணிக்கும் நடக்காத வினோதமான சோகம் நடைபெற்றிருக்கிறது. மேலும் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது.

- Advertisement -

நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியை வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களம் இறங்கிய டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

கேப்டனின் திடீர் விலகல்

இந்த போட்டியில் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. இப்படியான ஒரு போட்டியில் டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டன் அக்சர் படேல் திடீரென காயத்தின் காரணமாக விளையாடவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

மேலும் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் முதுகெலும்பாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் ஐபிஎல் தொடர் இடைநிறுத்தப்பட்டதும் ஆஸ்திரேலியா சென்றார். பிறகு ஐபிஎல் மீண்டும் தொடங்கும் பொழுது வர முடியாது என அறிவித்து விட்டார். மேலும் முக்கியமான பவுலர் நடராஜன் பார்மில் இல்லை. இந்த விஷயங்களும் டெல்லி அணியை கடுமையாக பாதித்தது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் முதல் அணி

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அணியாக டெல்லி இருந்தது. அவர்கள் தங்களுடைய முதல் நான்கு போட்டிகளில் நான்கு போட்டிகளையும் வென்று தொடர்ந்து சில வாரங்களாக புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். மேலும் அவர்கள் தங்களுடைய முதல் 8 போட்டியில் ஆறு போட்டியை வெல்லமும் செய்து இருந்தார்கள். எனவே அங்கிருந்து ஆறு போட்டியில் மூன்று வெற்றிகள் மட்டுமே தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி அணியை துவைக்க.. என் மனைவி சொன்ன அந்த விஷயம் தான் முக்கிய காரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

டெல்லி தங்களின் முதல் நான்கு போட்டிக்கு பிறகு அடுத்த ஒன்பது போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றது. மேலும் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி தங்களின் முதல் நான்கு போட்டிகளை வென்று இதுவரையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது கிடையாது. இந்த நிலையில் டெல்லி அணி முதல் நான்கு போட்டிகளை வென்று இருக்கும் முன்னேற முடியாத முதல் அணியாக மோசமான வினோத சாதனை படைத்திருக்கிறது!

- Advertisement -
Published by

Recent Posts