கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்த கருண் நாயர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கருண் நாயர் சிறப்பான ஆட்டம்
ஐபிஎல் தொடரின் 29 வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. மும்பை அணிக்கு மிக முக்கியமாக இருந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடிய போது இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய கருணாயர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
22 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்த அவர் குறிப்பாக பும்ராவின் ஒரே ஓவரில் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவரது ஒரே ஓவரில் 18 ரன்கள் அதிரடியாக குவித்த கருண் நாயர், இறுதியில் 40 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுன்ரி மற்றும் 5 சிக்சர் என 89 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் எனது பிறகு போட்டி மும்பை அணியின் பக்கம் மாறி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யாரையும் டார்கெட் செய்யவில்லை
இந்த சூழ்நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட கருண் நாயர் சிங்கள் எடுக்க ஓடிய போது பும்ராவின் மீது மோதியதால் இந்த இருவருக்கும் இடையே சற்று சூடான விவாதமும் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் தற்போது பும்ராவின் பந்துவீச்சை டார்கெட் செய்து அடிக்கப்பட்டது ஏன் என்று கருண் நாயரிடம் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க:ரிஷப் பண்ட் தோனிக்கு செஞ்ச பிளானை.. தோனி என்னை வச்சு அதை தடுத்தார்.. ரொம்ப ஸ்மார்ட்டான ஆள் – சிவம் துபே
அதற்கு பதில் அளித்த கருண் நாயர்
“பும்ராவின் ஓவரை டார்கெட் செய்து அடித்தது குறித்து கேட்கிறீர்கள். அந்த சமயத்தில் நான் தாக்குதல் நடத்தி விளையாடுவதையே முற்றிலும் நோக்கமாகக் கொண்டிருந்தேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் முழு சுதந்திரம் மற்றும் நம்பிக்கை எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே எனது பலத்திற்கு தகுந்த மாதிரி நான் விளையாடினேன். இந்த போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 50 ரன்கள் நான் அடித்தபோது எனது பெற்றோர் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னொரு முறை அதை என்னால் நிகழ்த்த முடியும் என்று நம்புகிறேன்” என கருநாயர் பேசியிருக்கிறார்.