விரலில் வெட்டுப்பட்ட அசுதோஷ் சர்மா.. போட்டிக்கு முன்ன நான் பேசினப்ப இதான் நடந்தது – ஹேமங்க் பதானி பேச்சு

0
406
Badani

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு விரலில் காயம் பட்டிருந்த அசுதோஷ் சர்மா தன்னிடம் என்ன கூறினார் என்பது குறித்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங்க் பதானி தெரிவித்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடையும் நிலையில் இருந்த பொழுது 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து அசுதோஷ் சர்மா டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியின் மூலமாக பினிஷர் ஆக உறுதியான இடத்தை அவர் தக்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

அதிரடிக்கு பின்னால் புத்திசாலித்தனம்

நேற்று டெல்லி அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்த பொழுது உள்ளே வந்த அசுதோஷ் சர்மா முதலில் பொறுமையாக விளையாடிய ஆட்டத்தை நகர்த்தினார். முதல் 15 பந்துகளை சந்தித்து இருந்த அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது என்பதில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்தமாக 31 பந்தில் 66 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக 19.3 ஓவரில் இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. மேலும் ஒரே பக்கத்தில் பந்தை அடிக்க நினைக்காமல் பந்துக்கு தகுந்தவாறு எல்லா புறங்களிலும் அடித்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அவரது பேட்டிங் சிறப்பான முறையில் மாறி இருக்கிறது.

- Advertisement -

வெட்டுப்பட்ட விரலுடன் அதிரடி

அசுதோஷ் சர்மா குறித்து பேசி இருக்கும் ஹேமங்க் பதானி கூறும் பொழுது “நான் அசுதோஷ் சர்மா பற்றி பேசியதாக வேண்டும். இந்த போட்டிக்கு முன்பாக அவருடைய விரல் வெட்டுப்பட்டு இருந்தது. எனவே போட்டியை அவர் தவற விடுவதற்கும் வாய்ப்புகள் இருந்தது. போட்டிக்கு முன்பு நான் அவருடன் காயம் குறித்து பேசினேன். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் உங்களால் விளையாட முடியுமா? என்று கேட்டேன்”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் மோசமாக கேப்டன்ஷி செய்தாரா? கவாஸ்கர் சொன்ன பதில்.. ரசிகர்கள் ஆச்சரியம்

“அவர் என்னிடம் மிகத் தெளிவாக நான் விளையாட விரும்புகிறேன், அணியுடன் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். நீங்கள் நடுவில் இருக்க விரும்புவதும் விளையாட விரும்புவதும் என்பது வேறு. ஆனால் அணி இக்கட்டான நிலையில் இருந்த பொழுது முதல் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து, இதற்குப் பின்பு 31 பந்தில் 66 ரன்களில் முடிப்பது என்பது அசாதாரணமானது. அதை அவர் அவருடைய ஸ்டைலில் செய்து முடித்தார்” என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -