ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணி தங்களுடைய முதல் போட்டியில் டெல்லியிடம் தோல்வியை தழுவியது. வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில், ரிஷப் பண்ட் பல தவறுகளை செய்தது, தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
சர்துல் தாக்கூருக்கு ஓவர் இருந்த நிலையில், பண்ட் அவருக்கு ஓவர் தராமல் இளம் வீரர்களுக்கு ஓவர் வழங்கினார். இந்த நிலையில், சுனில் கவாஸ்கர் ரிஷப் பந்தை ஆதரித்து, அவர் ஒரு புத்திசாலி கிரிக்கெட் வீரர் என்று கூறினார். “நீங்கள் நன்றாக பேட்டிங் செய்யும்போது, சிந்திக்க அதிகம் இருப்பதில்லை, ஆனால் பேட் அல்லது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாதபோது, பல விசயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் “என்று அவர் கூறினார்.
13 போட்டி இருக்கு:
மேலும், இது வெறும் முதல் போட்டி மட்டுமே என்றும், இன்னும் 13 ஆட்டங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பந்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி இன்னும் உறுதியாக மாறும் என்றும் கவாஸ்கர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் கவாஸ்கர் பேசுகையில் , “பண்ட் தெரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில், வெற்றிகளை விட தவறுகளிலிருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்,”
கவாஸ்கர் ஆதரவு:
இது முதல் போட்டி மட்டுமே, இன்னும் 13 ஆட்டங்கள் உள்ளன. அவருடைய கேப்டன்ஷி மேம்படுவதை நாம் பார்ப்போம் என்று நம்புகிறேன். மேலும், ஒரு கேப்டன் ரன்கள் அடிக்கும்போது அல்லது விக்கெட்டுகள் எடுக்கும்போது, பந்து வீச்சு மாற்றங்கள் மற்றும் பீல்டிங் அமைப்பதில் அவர்களுக்கு பெரும் நம்பிக்கை கிடைக்கிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: டெல்லி லக்னோ போட்டியில் விளையாடாத நடராஜன்.. உண்மையான காரணம் என்ன.?. முழு விவரம்
அவர் சில ரன்களைப் பெற்றவுடன், அவரது கேப்டன்ஷி இன்னும் உறுதியாக மாறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். ரிஷப் பண்ட், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் எந்தவித கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காமல் இருந்தது, அவருடைய பேட்டிங் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.