இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனிடம் பேசி அவரை பிளேயிங் லெவனில் இருந்து கழட்டி விட வேண்டும் என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தா கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சாய் சுதர்சன் அடுத்த சுதாரித்து இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்தார். இருந்த போதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அணி கலவையில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதால் அவரை நீக்க வேண்டும் என தீப்தாஸ் குப்தா கூறியிருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியில் சர்துல் தாக்கூர் இடத்திற்கு நிதீஷ் குமார் ரெட்டியை கொண்டு வந்தால் மட்டுமே பிரச்சனை தீர்ந்து விடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஒரு பேட்ஸ்மேனை நீக்கி குல்தீப் யாதவ் அல்லது ஆகாஷ் தீப் யாரையாவது கொண்டு வர வேண்டி இருக்கிறது. எனவே கம்பீர் மாற்றம் செய்யாமல் இருக்க முடியாது.
இதுகுறித்து தீப்தாஸ் குப்தா கூறும்பொழுது ” நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே முடிவடைந்து இருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் அதிக மாற்றங்களை செய்ய விரும்ப மாட்டீர்கள். ஆனால் அடுத்து போட்டி நடைபெறும் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமானது. எனவே அங்கு குல்தீப் யாதவ் விளையாட வேண்டும். முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்கும் பொழுது நீங்கள் எட்டாவது இடத்தை பற்றி கவலைப்பட மாட்டீர்கள்”
“கருண் நாயர் தன்னுடைய பெரும்பாலான உள்நாட்டு ரன்களை மூன்றாவது இடத்தில் எடுத்திருக்கிறார். மேலும் தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்றாவது இடத்தில் வந்து சிறப்பாக விளையாடியிருக்கிறார். நீங்கள் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு மூன்றாவது இடத்தில் கருண் நாயரை விளையாட வைக்கலாம். இதனால் ஆறாவது இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டி விளையாட முடியும்”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் 5 கேட்ச் விட்டதற்கு.. இந்த சின்ன பொருள்தான் காரணம்.. இது கூட சொல்ல மாட்டாங்களா? – முகமது கைஃப் பேச்சு
“சாய் சுதர்சனிடம் இது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்கான நீக்கம் கிடையாது எனவும், அணி கலவைக்காகவே இப்படியான முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது என்பதைப் பேசி புரிய வைத்து அவரை வெளியில் வைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.