ஜெய்ஸ்வால் 5 கேட்ச் விட்டதற்கு.. இந்த சின்ன பொருள்தான் காரணம்.. இது கூட சொல்ல மாட்டாங்களா? – முகமது கைஃப் பேச்சு

0
226
Kaif

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்பதற்கு ஜெய்ஸ்வால் ஐந்து கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது. தற்போது அவர் கேட்ச் வாய்ப்புகளை எதன் காரணமாக தவறவிட்டார் என்பது குறித்து முகமது கைப் கூறியிருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல கட்டங்களில் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தது. ஆனால் அப்படியான ஒவ்வொரு தருணங்களையும் இந்திய அணி இழந்து இறுதியில் போட்டியையும் தோற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் தவறவிட்டவை

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாக இங்கிலாந்து இந்திய அணி எடுத்த ஸ்கோரை நெருங்கி வந்து சமப்படுத்தியது. இதன் காரணமாக போட்டி முடிவை நோக்கி நகரும் விதமாக மாறியது.

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கட்டுக்கு மீண்டும் 97 ரன்னில் கேட்ச் விட்டார். இது ஏறக்குறைய இங்கிலாந்து அணியின் கைகளுக்கு ஆட்டம் மொத்தமாக செல்வதற்கு உதவியது. இந்த போட்டியை எடுத்துக் கொண்டால் ஜெய்ஸ்வால் கேட்ச் விட்டதுதான் போட்டியை தோற்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

ஏன் தவறவிட்டார்?

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் கேட்ச் வாய்ப்புகளை எதன் காரணமாக தவறவிட்டார் என்பது குறித்து இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பீல்டராக கருதப்படும் முகமது கைப் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார். இப்படி ஒரு சிறிய விஷயம் எப்படி இந்திய அணி நிர்வாகத்திற்கு தெரியாமல் போனது என ஆச்சரியம் அளிக்கிறது.

இதையும் படிங்க : ஒரே நாளில் 14 விக்கெட்.. வாய்விட்டு சுருண்ட ஆஸி.. போராடும் வெஸ்ட் இண்டீஸ்.. முதல் டெஸ்ட்

இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது “நீங்கள் இங்கிலாந்தில் டியூக்ஸ் பந்துக்கு பீல்டிங் பயிற்சி செய்கிறீர்கள். இதன் காரணமாக உங்கள் விரல்களில் காயம் படாமல் இருப்பதற்கு நீங்கள் டேப் சுற்றிக் கொள்கிறீர்கள். இதன் காரணமாக உங்கள் விரல்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. மேலும் இந்த டேப் சிறிது நேரத்தில் பஞ்சு போல ஆகிவிடுகிறது. இதன் காரணமாக பந்து இதன் மேல் படும்பொழுது எகிறி வெளியில் குதிக்கிறது. நீங்கள் எப்பொழுதும் இயற்கையான கைகளுடன் பீல்டிங் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பந்து கைகளில் நிற்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -