வீடியோ: பவுண்டரி லைனில் மரண மாஸ் கேட்ச்… ஒத்த கேட்ச்ல மொத்த மேட்சையும் மாற்றிய தீபக் ஹூடா!

0
352

ஆட்டத்தின் இருபதாவது ஓவரில் ராஜஸ்தான் வீரர் சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது, பவுண்டரி லைனில் அசத்தலான கேட்ச் எடுத்து ஆட்டத்தை மொத்தமாக மாற்றியுள்ளார் தீபக் ஹூடா. இதன் வீடியோவை கீழே பார்ப்போம்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், லக்னோ அணிக்கு ஓபனிங் பேட்டிங் இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நிதானமான துவக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

கேஎல் ராகுல் 39 ரன்கள் அடித்து முதல் விக்கெட்டை இழந்தார். கைல் மேயர்ஸ் வழக்கமான ஆட்டமாக இல்லாமல் இப்போட்டியில் ஸ்லோவாகவே 51 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் மிகச்சிறப்பாக அமைந்தது. ஜெய்ஷ்வால் 35 பந்துகளில் 44 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பத்தை கொடுத்துச்சென்றார். பட்லர் இப்போட்டியில் வழக்கத்திற்கு மாறாக மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் ஓவரில் அவுட்டானார்.

சஞ்சு சாம்சன் ரன் ஆனப்பின், படிக்கல் மற்றும் ரியான் பராக் இருவரும் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தும் பலனில்லாமல் போனது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பவுலிங்கில் கலக்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பரபரப்பான 20ஆவது ஓவர்:

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பராக் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து கொடுக்க, 3வது பந்தில் படிக்கல் அவுட்டானார்.

4ஆவது பந்தில் உள்ளே வந்த துருவ் ஜூரேல், வந்த உடனேயே சிக்ஸர் அடிக்க முயற்ச்சித்தார். கிட்டத்தட்ட சிக்ஸர் போய்விட்டது என நினைத்தபோது, பவுண்டரி லைனில் நின்ற தீபக் ஹுடா அசாத்தியமான கேட்சை எடுத்து லக்னோ அணியை மீண்டும் ஆட்டத்திற்க்குள் கொண்டு வந்தார்.

தீபக் ஹூடா எடுத்த கேட்ச் வீடியோ: