தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் விக்கெட்டை இன்-ஸ்விங் மூலம் வீழ்த்தினார் தீபம் சகர். இதன் வீடியோ பதிவு சமூக மனதில் ஒன்றில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது
திருவனந்தபுரத்தில் நடந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். துவக்கம் முதலே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் அர்ஷதீப் சிங் இருவரும் இன்-ஸ்விங் அவுட்-ஸ்விங் வீசி திணறடித்து விக்கெட் வீழ்த்தினர்.
அர்ஷதீப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாபிரிக்காவை கதிகலங்க செய்தார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 8 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. எய்டன் மார்க்ரம் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளர் பார்னல் மற்றும் கேசவ மகராஜ் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை மீட்டெடுக்க முயற்சி செய்தனர். இதில் கேசவ் மகராஜ் மட்டும் 41(35) ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அஸ்வின் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல், 4 ஓவர்கள் வீசி பெரும் 8 ரன்கள் மட்டுமே தந்தார்.
எளிய இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் மிகவும் சோதனையை தந்தனர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் பொறுமையாக விளையாட, சூரியகுமார் யாதவ் அதிரடியில் வழக்கம்போல் மிரட்டினார். கே எல் ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடக்கம். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில், தென்னாபிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது, தீபக் சஹர் வீசிய இன்-ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி நடையைக்கட்டினார். இதன் வீடியோ பதிவை வைத்து தீபக் சஹரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தீபக் சஹர் விக்கெட் வீழ்த்திய வீடியோ:
Arshdeep Singh and Deepak Chahar combine to get rid of both openers. #INDvsSA pic.twitter.com/wyMySsIIVw
— Cricket is Love ❤ (@cricketfan__) September 28, 2022