“இந்த இந்திய வீரரை இன்னொரு புவனேஷ்வர் குமார் மாதிரி யூஸ் பண்ணுங்க” – கமெண்ட் அடித்த சஞ்சய் மஞ்ரேக்கர்!

0
421

தீபக் சஹர் உங்களுக்கு இன்னொரு புவனேஸ்வர் குமார். அவரை சரியா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களில் ஒருவர் தீபக் சஹர். பவர் பிளே ஓவர்களின் மிகத் திறமையாக பந்து வீசக்கூடிய இவர், டி20 அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார். கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை அணிக்கு கிட்டத்தட்ட 14 கோடி வரை ஏலத்தில் எடுக்கப்பட்டார். துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால் அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

- Advertisement -

தொடர்ந்து ஆறு மாத காலம் எந்த வித கிரிக்கெட் போட்டியும் விளையாடாமல் பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காயம் நன்கு குணமடைந்ததால் ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். இதிலிருந்து அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார் என தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஸ்விங் மற்றும் சீம் இரண்டிலும் சிறப்பாக பந்துவீசி வரும் இவருக்கு இந்திய அணியில் இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிறைவு பெறுகின்றன.

தற்போது தீபக் சஹர் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“இந்திய அணி நிர்வாகம் தீபக் சஹரை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது என்று நினைக்கிறேன். அவர் உடல்தகுதியில் எந்த அளவிற்கு இருக்கிறார் என்பதை 50 ஓவர்கள் போட்டி மூலம் பரிசோதித்து வருகிறது. தொடர்ந்து டி20 போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த அவர், எதற்காக ஒரு நாள் போட்டிகளில் தற்போது விளையாட வைக்கப்படுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டி20 உலக கோப்பை தொடர் விரைவில் வரவிருக்கிறது. அதற்குள் இவரை பரிசோதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டி20 போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்பட்டு இருப்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தீபக் சஹர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மற்றொரு புவனேஸ்வர் குமார். புவனேஸ்வர் குமார் ஸ்விங் மற்றும் சீம் இரண்டிலும் மிகச் சிறப்பாக வீசக்கூடியவர். அதை தீபக் சஹர் மிகச் சிறப்பாக செய்கிறார். ஆகவே இவர் இளம் புவனேஸ்வர் குமாராக இந்திய அணியில் பயன்படுத்தப்படலாம். புவனேஸ்வர் குமார் நல்ல உடல் தகுதியில் தற்போது இருக்கிறார். அவருக்கு டி20 உலக கோப்பையில் இடம் கொடுக்கப்படலாம். ஆகையால் சஹர் விளையாடும் 11 வீரர்களில் இருப்பார் என்பது சந்தேகம்தான். ஆனால் எந்த நேரத்திலும் புவனேஸ்வர் குமார் காயம் ஏற்படலாம் என்பதால் தீபக்சஹார் நிச்சயம் அணியில் வைத்திருப்பது கூடுதல் பலமாக அமையும்.” என்றார்.