மும்பையில் என்னை இப்படி தான் நடத்தினார்கள்! இதனால் தான் நான் விளையாடவைக்கப்படவில்லை! – ஓப்பனாக பேசிய குட்டி ஏபிடி!

0
5617

மும்பை அணியில் தன்னை எப்படி நடத்துகிறார்கள்? இந்த வருடம் ஏன் ப்ளேயிங் லெவனில் விளையாட வைக்கவில்லை? ஆகிய கேள்விகளுக்கு தனது சமீபத்திய பேட்டியில் பதில் கூறியுள்ளார் டெவால் பிராவிஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டெவால் பிராவிஸ். அண்டர் 19 உலகக்கோப்பையில் அபாரமாக செயல்பட்ட இவர் மீது பலரின் கவனம் திரும்பியது. ஆகையால் எதிர்காலத்திற்கு சரியாக இருப்பார் என்கிற நோக்கில் எடுக்கப்பட்டார்.

- Advertisement -

கடந்த சீசனில் பல போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டார். முக்கியமாக ராகுல் சகர் வீசிய ஓவரில் அடுத்தடுத்த நான்கு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். ஆனால் நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கப்படவில்லை. தொடர்ந்து வெளியிலேயே அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் பேசியபோது, ஏன் எடுக்கப்படவில்லை? மற்றும் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தபோது மனநிலை எப்படி இருந்தது? ஆகியவற்றை பற்றி பகிர்ந்து கொண்டார்

“பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்படாத போது நமக்குள் இருக்கும் உணர்வை கட்டுப்படுத்தி கையாள்வது மிகவும் கடினம். இருப்பினும் நான் தொடர்ந்து என்னுடைய பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்ள பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உடன் வேலை செய்தேன். ஐபிஎல் சாதாரணமானது அல்ல, சர்வதேச தரம் மிக்கது. ஆகையால் அங்கு விளையாடுவதற்கு எண்ணற்ற பல டெக்னிக் வேண்டும். அதற்கென்று தரத்தை வளர்த்துக் கொண்டேன்.

- Advertisement -

அதேபோல் மும்பை அணியில் என்னை அவர்களில் ஒருவராக ட்ரீட் செய்கிறார்கள். பிளேயிங் லெவனில் இல்லாதபோதும் தொடர்ந்து எனக்கான உதவிகள் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வந்தது. அண்டர் 19 முடித்த உடனே என்னை அணியில் நம்பி எடுத்தார்கள். வளர்த்தார்கள். அவர்களுக்காக நான் தொடர்ந்து நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவர்களுக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்.

அவர்கள் என்னை வெளியில் அமர்த்தியதும் காரணத்திற்காகவே என்று உணர்கிறேன். அடுத்தடுத்த சீசனங்களில் என்னை நான் வளர்த்துக்கொண்டு, நான் யார் என்பதை நிரூபிக்க காத்திருக்கிறேன். கடவுளின் கிருபையால் எனக்கு நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று நம்புபவன் நான்.” என்றார்.