கோலியை முந்தினார் டிகாக்.. தங்க பேட் போட்டி.. முதல் 5 இடத்தில் இருக்கும் வீரர்கள்!

0
8294
Virat

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. நாளை கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பெங்களூர் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து தற்பொழுது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாளிப்பதாக மாறி இருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடம் ஆதரவு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் அதை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட்டின் சுவாரசியம் என்பது எந்த மாதிரியானது என்பதை புதிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பை தொடர் காட்டி இருக்கிறது. டி20 கிரிக்கெட் ரசிகர்களும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவித்து முன்னணியில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்ட வீரர்களில் சிலர் ஏமாற்றம் தந்திருந்தாலும், எதிர்பார்க்காத சில வீரர்கள் ரன்கள் குவித்து ஆச்சரியத்தை தந்திருக்கிறார்கள். மேலும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்களும் ஏமாற்றம் பெறாமல் செயல்பட்டு ரன்கள் குவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு கோல்டன் பேட் வழங்கப்படும். தற்பொழுது இந்தப் போட்டியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

குயிண்டன் டி காக் – தென் ஆப்பிரிக்கா – 9 போட்டிகள் 591 ரன்கள்
ரச்சின் ரவீந்தரா – நியூசிலாந்து – 9 போட்டிகள் 565 ரன்கள்
விராட் கோலி – இந்தியா – 8 போட்டிகள் 543 ரன்கள்
டேவிட் வார்னர் – ஆஸ்திரேலியா – 8 போட்டிகள் 446 ரன்கள்
ரோஹித் சர்மா – இந்தியா – 8 போட்டிகள் 442 ரன்கள்

இதேபோல் தற்போது வரை அதிக விக்கெட் எடுத்த வீரர்களாக நடப்பு உலக கோப்பையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் யார் என்று பார்க்கலாம்.

தில்சன் மதுசங்கா – இலங்கை – 21 விக்கெட்டுகள் – 9 போட்டிகள்
ஆடம் ஜாம்பா – ஆஸ்திரேலியா – 20 விக்கெட்டுகள் – 8 போட்டிகள்
ஜெரால்டு கோட்சி – தென் ஆப்பிரிக்கா – 18 விக்கெட்டுகள் – 7 போட்டிகள்
மார்க்கோ யான்சன் – தென் ஆப்ரிக்கா – 17 விக்கெட்டுகள் – 8 போட்டிகள்
முகமது சமி – இந்தியா – 16 விக்கெட்டுகள் – 4 போட்டிகள்