சிராஜ் கொஞ்சம் அடங்கி இருக்கணும்.. எங்களை தேவை இல்லாம சீண்டிட்டாரு – டேவிட் வார்னர் பேச்சு

0
1282
Warner

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆக்ரோஷ நடவடிக்கை எஞ்சி இருக்கும் தொடருக்கான தொனியை அமைத்துவிட்டதாக டேவிட் வார்னர் கூறியிருக்கிறார்.

தற்போதைய இந்திய அணியில் பொதுவாக முகமது சிராஜ் ஆக்ரோஷமான முறையில் களத்தில் செயல்பட கூடியவர். எதிரணி வீரர்களிடம் ஏதாவது பேசி ஒரு கொதிப்பான சூழ்நிலையை உருவாக்கி விடுவார். இந்திய அணியில் இதை ஒரு பொறுப்பாகவே அவரிடம் ஒப்படைத்திருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா ஒரு முறை சூசகமாக தெரிவித்து இருந்தால்.

- Advertisement -

ஹெட் உடன் ஏற்பட்ட மோதல்

இந்திய அணிக்கு சமீப காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தனி ஒரு வீரராக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஹெட் இருந்து வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என முக்கியமான இரண்டு போட்டிகளில் சதம் அடித்து இந்திய அணியின் சாம்பியன்ஷிப் கனவை நொறுக்கி விட்டார்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாடி 141 பந்தில் 140 ரன் எடுத்தார். இறுதியாக அவரை முகமது சிராஜ் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். அப்பொழுது அவர் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஹெட் முகமது சிராஜிடம் ஏதோ கோபமாக கூற, அதற்கு முகமது சிராஜ் அதே கோபத்தோடு வெளியே செல் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

முகமது சிராஜ் தொனியை அமைக்கிறார்

இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிய டேவிட் வார்னர் கூறும் பொழுது “இப்போது இந்திய அணி 130 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் முகமது சிராஜிடம் ‘உன்னை கொஞ்சம் அமைதி படுத்த வேண்டியது இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் கடினமான ஒரு சூழ்நிலையில் இப்பொழுது வெளியே சென்று பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை இருக்கிறது. பந்து ஆடுகளத்தில் இருந்து நன்றாக செல்கிறது மேலும் ஸ்விங் ஆகிறது. எனவே கொஞ்சம் அமைதியாக இரு” என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : 111 பந்து.. தன் உலக சாதனையை தானே உடைத்த ஹெட்.. இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக அதிரடி பேட்டிங்

” நாங்கள் மீண்டும் இப்படியே இருப்போம் என்று நினைக்க வேண்டாம். அதே சமயத்தில் முகமது சிராஜ் தனது ஆக்ரோஷமான நடவடிக்கையின் காரணமாக மீதம் இருக்கும் டெஸ்ட் தொடருக்கான தொனியை அமைக்கிறார். இப்படி செய்வதை நான் விரும்பவே செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -