இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டேவிட் வார்னர் கூறியிருக்கிறார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த பிறகு ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு இருக்கும் இரண்டு வாய்ப்பு
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தற்பொழுது இது இந்திய அணிக்கு மிகவும் கடினமான சூழ்நிலையாக அமைந்திருக்கிறது.
இல்லையென்றால் இந்திய அணி குறைந்தபட்சம் ஆஸ்திரேலியாக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் பட்சத்தில் இந்திய சீனியர் வீரர்களின் இடம் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தப்பிக்கும். இல்லையென்றால் கூடிய விரைவில் மூத்த வீரர்களில் சிலர் ஓய்வு பெற வேண்டிய நெருக்கடி சூழ்நிலை ஏற்படும்.
இந்திய அணியில் நான் பதட்டமாகவே இருப்பேன்
இது குறித்து பேசி இருக்கும் டேவிட் வார்னர் கூறும்பொழுது ” நியூசிலாந்து இந்தியா அணிக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை நான் திரும்பிப் பார்க்கிறேன். அதில் நியூசிலாந்து அணியினர் முதல் டெஸ்டின் போது சில அற்புதமான கேட்ச் பிடித்திருந்தார்கள். அது அவர்களுக்கு ஒரு சிறப்பான தொனியை அமைத்துக் கொடுத்தது. இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என எனக்கு தெரியும். நியூசிலாந்து அணி மிகச் சிறப்பான ஒன்றை செய்து காட்டி இருக்கிறது”
“இது ஆஸ்திரேலியா அணிக்கும் உதவி செய்யக் கூடியதாக அமைந்திருக்கிறது. இந்திய அணி சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டியை முழுமையாக தோற்று ஆஸ்திரேலியா வருகிறது. ஆஸ்திரேலியா அணியில் மூன்று உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் இருக்கிறார். நான் தற்போது இந்திய பேட்டிங் வரிசையில் இருந்தால் நிச்சயம் பதட்டமாகவே இருப்பேன்”
இதையும் படிங்க : இந்திய அணி இப்ப எங்க கூட டெஸ்ட் ஆட வாங்க.. தோக்கடிச்சு காட்டுறோம் – வாசிம் அக்ரம் கருத்து
“மேலும் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கண்கள் எடுக்க வேண்டும். தற்போது முழங்கால் காயத்தில் இருந்து வரும் முகமது ஷமி இந்திய அணியில் இல்லை. தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் சிராஜ் மட்டுமே இருக்கிறார்கள் இதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.