“29 பந்தில் சதம்.. என் இடத்தை நிரப்ப போவது இந்த பையன்தான்” – டேவிட் வார்னர் கணிப்பு

0
665
Warner

ஆஸ்திரேலியா கிரிக்கெட் எப்பொழுதும் வீரர்களிடம் மிகக் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் கிரிக்கெட் வாரியம்.எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும், ஃபார்ம் சரியில்லை என்றால் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் திரும்ப முடியாது.

அதேபோல் உதாரணமாக டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரர் சிறப்பாக இருக்கிறார் என்றால், அவர் திறமையை அங்கீகரித்து மற்ற வடிவங்களில் வாய்ப்பு தர மாட்டார்கள். மற்ற வடிவங்களிலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாக விளையாடினால் மட்டுமே அந்தந்த வடிவங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

இப்படியான கண்டிப்புடன் இருக்கக்கூடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒரே ஒரு வீரருக்கு மட்டுமே இதிலிருந்து விலகி வாய்ப்புக் கொடுத்தது. அவர்தான் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் காட்டிய இன்டெண்ட் எல்லோரையும் கவர்ந்தது. இதன் காரணமாக அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைத்தது.

அதிரடியாக விளையாடுவது மட்டுமில்லாமல், சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்து, பிறகு விரும்பிய வேகத்தில் விளையாடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதில் டேவிட் வார்னர் வல்லவர்.

- Advertisement -

மேலும் டேவிட் வார்னர் களத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எனர்ஜியை கொண்டு வரும் ஒரு இயந்திரம் போல் செயல்பட கூடியவர். இந்த வயதிலும் கூட உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் இந்திய அணிக்கு எதிராக களத்தில் எப்படி பீல்டிங் செய்தார் என்று பார்த்திருப்போம்.

தற்பொழுது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றிருக்கிறார். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடினாலும் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் இனி தொடர்ந்து விளையாட மாட்டார். மேலும் ஜூன் மாதம் நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பையுடன் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருடைய இடத்தை யார் நிரப்ப முடியும் என்கின்ற கேள்விக்கு, மார்ஸ் கோப்பையில் டாஸ்மானியா அணிக்கு எதிராக 29 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த ஜாக் பிரேசர் மெக்-ஹர்க்கை டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய இவரது ஸ்ட்ரைக் ரேட் 220 என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்து பேசிய டேவிட் வார்னர் கூறும் பொழுது “அந்த இளைஞர் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி இல்லை சிக்ஸருக்கு அடிக்க முடியும் என நினைக்கிறார். அவர் தெளிவான மனம் கொண்டவராக சுதந்திரமாக விளையாடுகிறார். ஒவ்வொரு அணியிலும் அவரைப் போன்று விளையாடக்கூடிய ஒருவர் தேவை. அவர்அணியில் இருப்பது சிறப்பான விஷயம்.

இதையும் படிங்க : “6வது கியரும் இருக்க ஆட்டோமேட்டிக் கார் மாதிரி இந்த இந்திய வீரர்.. இவரை யூஸ் பண்ணனும்” – இர்பான் பதான் பேச்சு

உயர்தர கிரிக்கெட் மட்டத்தில் அவர் சிறந்த எக்ஸ்போசராக இருப்பார். அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அவர் ஆஸ்திரேலியாவுக்காக 10 ஆண்டுகள் விளையாடக்கூடிய வீரராக மாறுவார். அவர் தன்னைத்தான் ஆதரிக்கக் கூடிய வீரராக இருந்தால், நீண்ட காலத்திற்கு விளையாடுவார். அந்தத் திறமை அவருக்கு இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.