டேவிட் வார்னரின் வாத்தி கம்மிங் ; இணையத்தை கலக்கும் வீடியோ

0
508
David Warner Dancing

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வீரர் என்று பார்த்தால் அதில் நிச்சயம் டேவிட் வார்னர் இருப்பார்.குறிப்பாக அவருடைய டிக் டாக்கிற்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ளது.அவப்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் வரும் படங்களின் காட்சிகளை எடிட் செய்தும் சில வீடியோக்களில் நடிகர் முகத்திற்கு பதில் இவருடைய முகத்தை சித்தரித்தும் ( Reface ) வீடியோக்களை அவபோது வெளியிடுவது உண்டு.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் தான் இந்த வாத்தி கம்மிங். இந்தப் பாடலுக்கு குட்டீஸ் முதல் பெரியோர் வரை மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.குறிப்பாக கிரிக்கெட்டில் இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு .

இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார். தமிழக கிரிக்கெட் அணி , அவர்களை தொடர்ந்து இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, வனிதா,திவ்யா,அகான்ஷா ஆகியோரும் டெல்லி கேப்பிடல் அணி வீரர்கள் ரகானே,ரிஷப் பண்ட்,ஷிகர் தவான்,அஸ்வின் ஐ.பி.எல்லில் ஸ்டீவ் ஸ்மித் முதல் ரஷீத் கான் வரை அனைவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும்தான் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடுவார்களா ? ஏன் நான் ஆட மாட்டேனா ? என்று வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் டேவிட் வார்னர் தளபதி ரசிகர் என்று அவரை கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்து வரும் டேவிட் வார்னர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார். ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐபிஎல் இல் தனது மோசமான பார்ம் காரணமாக அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது ஹைதராபாத் அணி.