டேவிட் வார்னர் அதிரடி அரை சதம் ; எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி அசத்தல்

0
412
David Warner DC

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பத்தொன்பாவது ஆட்டம், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், ஸ்ரேயாஷ் தலைமைத் தாங்கும் கொல்கத்தா அணிக்கும், ரிஷாப் தலைமைத் தாங்கும் டெல்லி அணிக்கும் இடையே நடந்து வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஷ் டெல்லியை பேட்டிங் செய்ய அழைக்க, களம் புகுந்த பிரித்வி-வார்னர் ஜோடி, கொல்கத்தா பவுலிங் யூனிட்டை அடித்து நொறுக்க தொடங்கியது. பவர்-ப்ளேவில் மட்டும் இந்த ஜோடி 68 ரன்களை குவித்தது!

- Advertisement -

தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி பிரித்வி 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேற பிரிந்தது. ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற டேவிட் வார்னர் நிறுத்தாமல் அதிரடியைத் தொடர, டெல்லியின் ஸ்கோர் கிடுகுடுவென எகிற தொடங்கியது.

முடிவில் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து டேவிட் வார்னர் இரண்டு ஐ.பி.எல் சாதனைகளோடு வெளியேறினார். ஐ.பி,எல்-ல் அதிக அரைசதங்கள் அடித்த பட்டியலில் முதலிடத்திலும், 5,500 ரன்களை எட்டிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனைகளைப் படைத்தார்.

ஐ.பி,எல்-ல் அதிக அரைசதங்கள் அடித்த முதல் ஐந்து வீரர்கள்

55 – டேவிட் வார்னர்
47 – விராட் கோலி
46 – ஷிகர் தவான்
43 – ஏ.பி.டிவிலியர்ஸ்
41 – ரோகித் ஷர்மா

- Advertisement -