ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்! அணி நிர்வாகத்தின் அதிரடி முடிவு!

0
5261

சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ள புதிய அணிக்கு கேப்டனாக டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சவுத் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. முதல் சீசனில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆறு அணியையும் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, லக்னோ, ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் அணிகளை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு அணியும் இரண்டு முதல் ஐந்து வீரர்கள் வரை ஏலத்திற்கு முன்பாக எடுத்திருக்கின்றன. மீதமுள்ள வீரர்கள் ஏலத்தின் போது எடுக்கப்படுவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ள அணிக்கு பார்ல் ராயல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி பெரிய ஏலத்திற்கு முன்பாக நான்கு வீரர்களை எடுத்திருக்கிறது. டேவிட் மில்லர், ஜோஸ் பட்லர், ஒபேட் மெக்காய் மற்றும கார்பின் போஸ் ஆகிய நான்கு வீரர்கள் உள்ளனர். தற்போது இந்த அணிக்கு கேப்டனாக டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ள அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த அணியில் டூ ப்ளசிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்கள் இருக்கின்றனர். இந்த அணிக்கு டூ ப்ளசிஸ் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட மொயின் அலி தனிப்பட்ட காரணங்களுக்காக வருகிற தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் விளையாடப்போவது இல்லை என்றும், ஆனால் இனிவரும் காலங்களில் தவறாமல் இந்த அணிக்காக விளையாடுவேன் என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து அவர் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடருக்கு சேர்மன் ஆக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் கேப்டன் கிரீன் ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தலைமையிலான குழு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு, வருகிற ஜனவரி மாதம் முதல் சீசனை துவங்குவதாக முடிவெடுத்துள்ளது. போட்டிகளுக்கான முழு அட்டவணை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, இரு தினங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் தென்னாபிரிக்கவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுக்கும் விளையாட்டுப் பிரிவின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்த்தனை நியமிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.