இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை பிரகாசமாக்கும் நியூசிலாந்து… இலங்கை-நியூசிலாந்து டெஸ்டில் என்ன நடந்தால் இந்தியா பைனலுக்கு போகும்? – ரிப்போர்ட்!

0
1082

நியூசிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று, இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றால், இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கின்றது.

- Advertisement -

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒன்றை இலங்கை அணி தோல்வியுற்றால் கூட, இந்திய அணி சிக்கலின்றி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ரன்கள் அடித்திருந்தது. அதன் பின் பவுலிங்கில் மிரட்டி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தது. ஆகையால், இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய நியூசிலாந்து அணிக்க்கு, டேரல் மிச்சல் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இவருக்கு ஆங்காங்கே பக்கபலமாக இருந்த கீழ் வரிசை வீரர்கள், தங்களது பங்கிற்கு 20-30 ரன்கள் அடித்தனர். அதில் குறிப்பிடத்தக்க விதமாக மேட் ஹென்றி, அதிரடியாக விளையாடி 72 ரன்கள் விலாசினார். இதுதான் நியூசிலாந்து அணிக்கு முன்னிலை பெற உதவியது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் 200-220 ரன்கள் வருவதே நியூசிலாந்து அணிக்கு கடினமாக சூழலாக இருந்தது. ஆனால் டேரில் மிட்ச்சல், மேட் ஹென்றி ஆகியோரின் ஆட்டத்தால் 373 ரன்கள் அடித்தது. இதனால் 18 ரன்கள் முன்னிலையும் பெற முடிந்தது அதன் பிறகு பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் தட்டுத்தடுமாறி மூன்று விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் அடித்திருக்கிறது.

மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்பி இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. இப்போட்டி டிராவை நோக்கி செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

ஒருவேளை போட்டி டிரா செய்யப்பட்டால், இலங்கை அணியின் வெற்றி சதவீதம் குறைந்து விடும். இதுவும் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.