கில் இடத்துக்கு சிக்கல்.. 35 வயது இந்திய வீரர் வைத்த மாஸ்டர் செக்.. அசத்தல் பேட்டிங்!

0
651
Gill

இந்திய கிரிக்கெட் தற்போது மூன்று வடிவங்களிலும் புதிய வீரர்களுடன் புதிய மாற்றங்களுக்கு தயாரான நிலையில் இருக்கிறது. இனி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு விளையாடப் போகும் நிரந்தர வீரர்களை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது.

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன் கொண்டுவரப்பட்டார். மேலும் அதே அணியல் ரஜத் பட்டிதார் அறிமுகப்படுத்தப்பட்டார்.

- Advertisement -

இதேபோல் இந்திய டி20 அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற மூத்த வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம் இருக்கிறதா இல்லையா என்பதை கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் திடீரென துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரகானே அணியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் புஜாரா மேல் அணிக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படவில்லை. இவர்களது இடங்களுக்கு கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் விளையாடுகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் கவனிக்கத்தக்க வகையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படியான சூழலில் நேற்று துவங்கிய இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் செத்தேஸ்வர் புஜாரா அதிரடியாக சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இது அவருக்கு 61 வது முதல் தரப்போட்டி சதமாகும்.

இந்த மாதத்தின் இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. தற்பொழுது புஜாரா ஃபார்முக்கு திரும்ப வந்து கொண்டிருக்கிறார். இது தொடரும் பட்சத்தில் கில் இடத்துக்கு பெரிய ஆபத்து இருக்கிறது. இந்தியாவில் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக புஜாரா மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!