“வளர்ப்பு பிராணிக்காகவே ஐபிஎல் விட்டு போனேன்.. கோலி இன்னும் என்னதான் செய்யனும்” – டேல் ஸ்டெயின் பேச்சு

0
152
Virat

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

எதிர் நிலையில் இரண்டு போட்டிகளும் முடிவடைந்திருக்க மூன்றாவது போட்டி துவங்குவதற்கு இன்னும் நடுவில் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்தியத் தேர்வுக்குழு கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவிப்பதில் மிகுந்த காலதாமதத்தை செய்து வருகிறது.

இரண்டாவது டெஸ்டில் விளையாட முடியாத கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரது காயம் எப்படி இருக்கிறது? முதல் இரண்டு டெஸ்டில் பங்கேற்காத விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி வருகிறாரா? என்பது குறித்து எந்தவித தெளிவும் இல்லாமல் இருக்கிறது.

தற்போது நிலவும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் பொழுது கேஎல் ராகுல் காயம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அணியை அறிவிப்பதற்கு இந்திய தேர்வுக்குழு காத்திருப்பதாகவே தெரிகிறது.

- Advertisement -

விராட் கோலி கிடைப்பதாக இருந்தால் கேஎல் ராகுலுக்காக இத்தனை நாட்கள் தேர்வுக்குழு காத்திருக்காது. இதன் மூலம் விராட் கோலி கடைசி மூன்று டெஸ்டுகளுக்கு கிடைக்க மாட்டார் என்பதாகவே தெரிகிறது.

தற்பொழுது விராட் கோலி விளையாடாமல் இருப்பது பற்றி பேசி உள்ள டேல் ஸ்டெயின் “குடும்பமே உங்களது மிக முக்கியமான முன்னுரிமை. மன்னிக்கவும் இந்த இடத்திலேயே கதை முடிந்து விட்டது அவ்வளவுதான்.

என்னிடம் வளர்ப்பு பிராணிகளாக மூன்று நாய்கள் இருந்தன. அதில் ஒரு நாய் உடல்நலம் இல்லாமல் போக, நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட்டு கிளம்பினேன். மேலும் எப்பொழுது போய் பார்ப்பேன் என்று விமானத்திற்குள் குதித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால்அவைகள் என் குடும்பம்.

விராட் கோலி தனது மனைவியுடன் இருப்பதற்காக வீட்டில் இருந்தால், இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கிறார்கள் என்றால், இதில் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர் நீண்ட வருடங்களாக இந்திய கிரிக்கெட் பெரிய சேவை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : புஜாரா 62வது சதம்.. இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியாது.. வினோதமான காரணம்

மேலும் அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர். வெற்றிகரமானகேப்டனாகவும் இருந்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஒரு மனிதன் தன்னை நிரூபிக்க இன்னும் என்ன தான் செய்ய முடியும்? என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.