விராட் கிட்ட போட்டிக்கு முன்னாலே பேசினேன்.. அவர் தெளிவா இந்த ஒரு விஷயத்தை சொல்லிட்டார் – டேல் ஸ்டெய்ன் தகவல்

0
157
Steyn

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக விராட் கோலியிடம் தான் பேசியது குறித்து டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஒரே வடிவத்தில் மட்டும் விராட் கோலி விளையாடுவதால் அவரை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வைக்க பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. அதே சமயத்தில் அவருக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதன் காரணத்தால் சில சங்கடங்கள் உள்ளுக்குள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நான் விராட் கோலியிடம் பேசினேன்

இதன் காரணமாகவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கம்பீர் அகர்கர் இருவரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விராட் கோலி குறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது “நேற்று நான் இரவு உணவுக்கு முன்பாக விராட் கோலியை சந்தித்தேன். அப்போது அவரிடம் நீங்கள் தொடர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஏனென்றால் அவர் தற்போது ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். அதற்கு அவர் என்னிடம் நான் தற்போது லண்டனில் வசித்து வருகிறேன் என்று கூறினார். அவருக்கு அங்கே சர்ரே அகடாமியில் நல்ல பயிற்சி வசதிகள் இருக்கிறது. மேலும் தனிப்பட்ட பயிற்சியாளரும் இருக்கிறார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

தொழில்முறை வீரர்கள் இப்படித்தான்

“விராட் கோலியை பொறுத்தவரையில் அவர் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பார். இப்பொழுது அவரைப் பார்த்தால் சிறப்பாக இருக்கிறார். மனதளவில் அவர் மிகவும் வலிமையானவர். இத்தனை காலமாக அவர் கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த வடிவத்தில் மட்டும் 51 சதங்கள் எடுத்திருக்கிறார்”

இதையும் படிங்க : கம்பீரால விராட் ரோகித் இல்லாம எதுவும் பண்ண முடியாது.. அவர் 2013லயே சொல்லிட்டார் – ஸ்ரீகாந்த் பேச்சு

“எனவே அவருக்கு ரன்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியும். மேலும் அவர் ஆட்டம் குறித்தும் அவருக்கு தெரியும். அவர் அணியில் இணைகிறார். பிறகு முழு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார். பிறகு நீங்கள் நேற்று நடந்தது போல பார்க்கிறீர்கள். ஒரு தொழில் முறை வீரர் இப்படித்தான் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -