இந்திய அணி நிர்வாகம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் உலக கோப்பையில் எதுவும் செய்ய முடியாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதமும் ரோகித் சர்மா அரைசதமும் அடித்து இருந்தார்கள். அவர்களுடைய சிறப்பான பேட்டிங் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் அவர்கள் இருவரையும் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட வைப்பது குறித்து வெளியில் ஆலோசனைகள் செல்வது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இல்லாமல் எதுவும் முடியாது
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் தற்போது ஒரே வடிவத்தில் மட்டும் விளையாடுகின்ற காரணத்தினால் அவர்களுடைய மனநிலையை சரியாக வைத்திருப்பது மிகவும் கடினம். ஆனால் அவர்கள் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தங்கள் இடத்தை உறுதி செய்து விட்டார்கள். அவர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது”
“இவர்கள் இருவரும் இல்லாமல் அடுத்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது. இவர்கள் இருவருமே உங்களுக்கு தேவை. இவர்கள் பற்றி நீங்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது. இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடும் பொழுது எதிரணி என்ன நிலைக்கு ஆளாகிறது என்பதை 2013லேயே விராட் கோலி கூறிவிட்டார்”
இது இந்திய அணிக்கு முக்கியம்
“விராட் கோலி சதம் அடித்ததற்கு பிறகுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அவர் நூறு ரன்னில் இருந்து 135 ரன்னுக்கு 10வது கியரில் பேட்டிங் செய்தார். அதனால்தான் இந்திய அணி 350 ரன்கள் எடுக்க முடிந்தது. இல்லையென்றால் குறைவாக எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்திருக்கலாம். விராட் கோலியின் கடைசி நேர அதிரடி இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்”
இதையும் படிங்க: என் நண்பன் விராட் கோலி யார்கிட்டயும் நிரூபிக்க வேண்டியது இல்லை.. அந்த ஒரு குவாலிட்டி போதும் – தினேஷ் கார்த்திக் பாராட்டு
“விராட் கோலி எப்படி இப்படி தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார். அவர் மட்டும் ஒரு பக்கத்தில் தனித்து ஓடிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலியாவின் அடிலய்ட் மைதானம் சிறப்பானது என்று நான் நினைத்தேன். ஆனால் அவருக்கு அதைவிட சிறப்பானது ராஞ்சி மைதானம் என்று தெரிகிறது. மேலும் இது தோனியின் சொந்த ஊர். அதை விராட் கோலி தன்னுடைய வேட்டை மைதானமாக வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






