“வெளி உலகில் 2பேர் இருக்காங்க.. ஆனா பும்ரா மாதிரி யாரும் கிடையாது” – டேல் ஸ்டெயின் பாராட்டு

0
247
Bumrah

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளுக்கு ஆச்சரியப்படும் விதமாக பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டன.

பொதுவாக இந்தியாவில் சில ஆண்டுகளாக அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் ஒத்துழைக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய கடினத்தை கொடுக்கக்கூடிய ஆடுகளங்களே கொடுக்கப்பட்டன.

- Advertisement -

இந்த நிலையில்தான் பேட்டிங் செய்ய கொஞ்சம் சாதகமான ஆடுகளங்களில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்யக்கூடிய இங்கிலாந்து அணிக்கு எதிராக, மிகத் தைரியமாக பேட்டிங் செய்ய சாதகமான இரண்டு ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டன.

இப்படிப்பட்ட ஆடுகளத்தில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் எந்த சாதகமும் இல்லை. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தனது அபார வேகப்பந்து வீச்சின் மூலமாக எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். மேலும் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இதுகுறித்து உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறும் பொழுது “பும்ரா ஒரு ஆல் ரவுண்ட் வந்துச்சாளர். தன்னுடைய ஸ்கிட்டி பவுலிங் ஆக்சன் மூலம், மேலும் அப்படியான ஆடுகளத்தில் அவரால் விக்கெட் எடுக்க முடிகிறது என்கின்ற பொழுது, அவர் மிகவும் அற்புதமான பந்துவீச்சாளராக மாறுகிறார்.

- Advertisement -

யார்க்கர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கக்கூடிய பந்துவீச்சாளர்களாக வெளியில் ஸ்டார்க் மற்றும் போல்ட் ஆகியோர் இருக்கலாம். ஆனால் இவர்களையும் தாண்டி இதில் மிகச்சிறந்தவர் என்றால் பும்ராதான்.

இதையும் படிங்க : AUSvsWI.. 100வது போட்டியில் வார்னர் வெறித்தனம்.. 87 ரன்னுக்கு 8 விக்கெட்.. பரபரப்பான போட்டியின் முடிவு

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் யார்க்கர் மூலம் விக்கெட் வீழ்த்தப்பட்டால், அதுவே சிறந்த யார்க்கர் என்று நான் முன்பு கூறி இருக்கிறேன். ஏனென்றால் இந்த நாடுகளில் ஆடுகளத்தை பந்துவீச்சில் இருந்து எடுத்துவிட்டு திறமையால் விக்கெட் எடுப்பது எப்பொழுதும் அபாரமானது” என்று கூறியிருக்கிறார்.