எனக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக் கூடாது என தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறியிருக்கிறார்.
இதுவரையில் இந்திய அணியின் இந்த அணுகுமுறையை இங்கிலாந்து தரப்பில் இருந்து மட்டுமே எதிர்த்து வந்தார்கள். இந்த நிலையில் முதல் முறையாக வெளிநாட்டு வீரரான டேல் ஸ்டெயின் எதிர்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா சுழல் பந்துவீச்சாளர் சம்சி இது குறித்து பேசும்பொழுது “இந்திய வீரர்கள் உடனடியாக ட்ரா முடிவை ஏற்றுக் கொள்ளாதது குறித்து ஏன் இவ்வளவு பேசப்படுகிறது? என்று எனக்கு புரியவில்லை. ஒரு சலுகை வழங்கப்பட்டது ஆனால் அது இந்திய வீரர்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர்கள் முடிவெடுக்கும் உரிமையை முழுமையாக பெற்று இருக்கிறார்கள். மேலும் அவர்கள் சதம் அடித்தார்கள். ஆனால் அதற்காக அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். உடனடியாக அங்கு ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் தன் சக நாட்டு வீரருக்கு டேல் ஸ்டெயின் மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இந்திய வீரர்கள் டிராவுக்காகத்தான் விளையாடினார்கள் சதத்திற்காக விளையாடவில்லை, எனவே அவர்கள் ஸ்டோக்ஸ் கேட்டபொழுது ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து டேல் ஸ்டெயின் கூறும்பொழுது “சம்சி இதில் நிறைய அடுக்குகள் இருக்கிறது. ஆனால் நான் மக்கள் உணராத ஒரு விஷயத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் இந்திய வீரர்கள் டிரா செய்வதற்காக விளையாடினார்கள் சதம் அடிப்பதற்காக விளையாடவில்லை. எனவே அவர்கள் டிராவுக்கு ஒரு வாய்ப்பு வந்த பொழுது அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யாத போது ஸ்டோக்ஸ் விரக்தி அடைந்தது சரியானது”
இதையும் படிங்க : 5-5.. ஆச்சரிய தொடர்.. வினோத வெற்றி.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டி எடுத்த ஆஸி.. பரிதாப ஒயிட் வாஷ்
“அவர்கள் சதம் அடிப்பதற்காக விளையாடி இருந்தால், கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வேகமாக விளையாடி சதத்தை நோக்கி சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. ஆனால் கடைசி ஒரு மணி நேரத்தில் அவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ந்த பிறகு செய்தது சரியில்லை. மேலும் போட்டியில் இரு அணிகளும் ஒரு அணியை மிஞ்சி செயல்படுவதற்கு எங்கும் முயற்சி செய்யவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.