வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை அபாரமான முறையில் கைப்பற்றி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்தது. மொத்தம் இந்த எட்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றது. மேலும் எட்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியாவே வென்று இருக்கிறது. இந்த வகையில் இந்த தொடர் ஆச்சரியமானதாக அமைந்திருக்கிறது.
காப்பாற்றிய ஹெட்மாயர்
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் தந்தார்கள். இதைத் தொடர்ந்து மிடில் வரிசையில் வந்த சிம்ரன் ஹெட்மாயர் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ரூதர்போர்டு 17 பந்துகளில் 35 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் துவாசியஸ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு கேமரூன் கிரீன் 18 பந்தில் 32 ரன், டிம் டேவிட் 12 பந்தில் 30 ரன், மிட்சல் ஓவன் 17 பந்தில் 37 ரன், ஆரோன் ஹார்டி 25 பந்தில் 28 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : ஒரு மேட்ச்ல முடிவு பண்ணாதீங்க.. கில் அவரோட திறமையை பார்த்து வாய்ப்பு தரணும் – கபில்தேவ் நம்பிக்கை
மேலும் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்று ஒயிட் வாஷ் செய்தது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் ஒயிட் வாஷ் செய்திருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முழு வெற்றித் தொடராக அமைந்திருக்கிறது.






