கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

அக்சர் படேலை அனுப்பினது ஓநாய் கிட்ட தூக்கி போட்ட மாதிரி.. அது ஒரு மோசமான முடிவு – டேல் ஸ்டெய்ன் விமர்சனம்

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பேட்டிங் வரிசையில் அக்சர் படேலை மூன்றாவது இடத்தில் களம் இறங்கியது குறித்து டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு துணை கேப்டன் கோல்டன் டக் ஆனார். இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு அனுப்பப்பட்ட அக்சர் படேல் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

அவர் உங்களின் சிறந்த பேட்டரா?

நேற்று அவரை அனுப்பிய போது ஏற்கனவே இடதுகை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா களத்தில் இருந்தார். இன்னொரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்றாலும் கூட திலக் வர்மா வெளியில் இருந்தார். இப்படி இருக்கும் பொழுது அக்சர் படேலை அனுப்பியது பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்போது ” அக்சர் படேல் உங்களின் சிறந்த பேட்டராக இருக்க வேண்டும். அது ஒரு பரிசோதனையோ அல்லது கடினமான சூழ்நிலையோ கிடையாது. அது என்னுடைய கருத்துப்படி ஒரு பெரிய தவறு. அக்சர் படேல் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் அந்த சூழ்நிலையில் அந்த இடத்தில் அவரை அனுப்பியது ஓநாய்களிடம் தூக்கி போடுவது மாதிரி உணர்ந்தேன்”

- Advertisement -

அவுட் ஆனது யார்?

“அந்த முடிவை எடுக்கும் பொழுது, அவருடைய பங்கு என்ன? அவர் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட சென்று இருந்தால் அது சரியானது. இல்லை நீங்கள் இடது வலதுகை பேட்டிங் காமினேஷனை அமைக்க நினைத்தாலும் சரியானது. ஆனால் அப்போது களத்தில் இருந்தது அபிஷேக் சர்மாதான். அவர் ஆட்டம் இழந்து இருந்தால் நீங்கள் அக்சர் படேலை அனுப்பி வைத்திருக்கலாம். அது அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும்”

இதையும் படிங்க: அபிஷேக் ஷர்மா வசமா மாட்டிக்கிட்ட மாதிரி தெரியுது.. இனி அவர் எப்படி சமாளிக்கிறார்னு பார்க்கிறேன் – இர்பான் பதான்

“அப்படி இல்லாமல் இரண்டு இடதுகை வீரர்கள் களத்தில் இருந்தார்கள். இது கேள்விக்குறிகளை உருவாக்குகிறது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி பரிசோதனைகளை செய்து வருகிறது. அதுபோன்று செய்வதற்கு இந்திய அணிக்கு தேவை எதுவும் இல்லை. 2-1 என்று முன்னேற வேண்டிய போட்டியில், நானாக இருந்திருந்தால் சிறந்த பேட்ஸ்மேன்களை அனுப்பி வைத்து விஷயங்களை எளிமையாக வைத்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts