நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் ஷர்மா எட்டு பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்த விதம் குறித்த தனது யூட்யூப் சேனலில் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கியது தென்னாபிரிக்க அணி20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டிக்காக் 46 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 17 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது மார்க்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஸ்டம்ப் லைனில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேலும் அதற்கு பின்னால் வந்த வீரர்களும் தங்களது பொறுப்பை உணராமல் விளையாட இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இர்பான் பதான் அபிஷேக் ஷர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அபிஷேக்சர்மா தற்போது நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அவர் பயமில்லாமல் விளையாடி வருகிறார். முந்தைய ஆட்டத்தில் அவர் 9 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் பவர் பிளேவின் முதல் ஓவரிலேயே 9 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு பிறகு 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த போது மற்றொரு கால் லெக் ஸ்டம்பை நோக்கி நகர்ந்தது தெரிகின்றது.
இதையும் படிங்க:நானும் கில்லும் அத செஞ்சிருக்கணும்.. அக்சர் 3வது இடத்தில வந்தது இதனாலதான் – கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி
அதனால் அவர் ஒரு சங்கடமான மனநிலையில் சிக்கிக்கொண்டார். மார்க்கோ ஜான்சன் அதேபோல பவுன்ஸ் பந்துகளை வீசுகிறார், மற்ற பேட்ஸ்மேன்களும் அதில் சிக்கிக் கொள்கிறார்கள். அபிஷேக் ஷர்மாவுக்கு எளிதாக இல்லாமல் இருக்க பந்தை அவருக்கு பக்கமாக வைப்பதும் ஒரே லைன் அண்ட் லெந்தில் வைப்பது தான் அவருடைய திட்டம். இனிவரும் ஆட்டங்களில் அவர் இதை இனி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.






