இந்திய கிரிக்கெட்

இனி அந்த இடம் கம்பீருக்குதான்.. கோலி ஆதிக்கம் முடிந்தது.. ஓபனா சொல்ல கஷ்டமா இருக்கு – டேல் ஸ்டெய்ன் பேட்டி

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்பொழுது இதைச் சுற்றி நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கம்பீரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வந்தது மிகவும் சரியானது என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர் ஜூலை 27ஆம் தேதி இலங்கை சுற்றுப் பயணத்தில் இந்திய அணியுடன் இணைகிறார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டு வெள்ளை பந்து தொடர்களிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இருக்க மாட்டார்கள்.

மிகவும் ஆக்ரோஷமான சுயநலமற்ற வீரரான கவுதம் கம்பீர் தன்னுடைய அணியும் அப்படியே இருக்க வேண்டும் என விரும்பக் கூடியவர். கேப்டனாக மட்டும் இல்லாமல் வழிகாட்டியாகவும் அணியில் வீரர்களை விட அதிகம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர். எனவே நட்சத்திர வீரர்கள் இருக்கும் இந்திய அணியில் இவர் எப்படி செயல்படுவார்? என்பது எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது “நான் கவுதம் கம்பீரின் தீவிர ரசிகன். எனக்கு அவருடைய ஆக்ரோஷம் மிகவும் பிடிக்கும். நான் விளையாடிய ஆக்ரோஷமான இந்திய வீரர்களில் அவரும் ஒருவர். அவர் மீண்டும் இந்திய அணிக்கு வந்திருப்பது சிறப்பானது.இனி இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமை அவர் எடுத்துக் கொள்வார். விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு பெரிய பங்கு இருக்காது. அதே சமயத்தில் அவர்கள் முற்றிலுமாக ஆதிக்கத்தை இழந்து விட்டார்கள் என்று சொல்ல விரும்பவில்லை.

- Advertisement -

இந்தியாவில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமான வீரர்கள் தேவை. அவர்கள் விளையாட்டை கடினமானதாக மாற்றுகிறார்கள். மேலும் கடினமாக விளையாடுகிறார்கள். நாங்கள் வெளியில் டி20 லீக்கில் விளையாடும் பொழுது ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாக ஆனோம்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பை ஆப்கான் கூட தோற்றோம்.. ஆனா தோல்விக்கு இந்தியாவுக்காக நடந்த தப்புதான் காரணம் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

கம்பீரைப் பொறுத்தவரை களத்தில் மிகக் கடுமையாக இருந்தாலும் கூட, களத்திற்கு வெளியே அவர் மிகவும் சிறந்த மனிதர். அவர் ஒரு ஜென்டில்மேன். மேலும் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருக்கிறார். எனவே இந்தக் கண்ணோட்டத்தில் அவர் இந்திய அணிக்கு அற்புதமாக இருப்பார் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts