பாகிஸ்தான் கிரிக்கெட் டீமின் ஹெட் கோச்சாக செயல்பட்டு வரும் மைக் ஹெசனின் உண்மையான விசுவாசம் குறித்து அந்த நாட்டின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிலாந்து டீமிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்த சர்ச்சையை ரஷீத் லத்தீப் கிளப்பி இருப்பது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் மேலும் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து ரஷீத் லத்தீப் பேசும்போது “மைக் ஹெசன் மீது எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும், ஐபிஎல் தொடருடன் நேரடியாக கனெக்ட் ஆகி இருக்கும் நபர்களை ஏஜெண்டுகளாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, எனவே நம்மிடம் இருக்கும் நபர்களே நமக்கு டேமேஜ் செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ரஷீத் லத்தீப் “முன்னாள் கோச்சுகளான பாப் வூல்மர் மற்றும் ஜாஃப் லாஸன் ஆகியோர் பாகிஸ்தான் டீமிற்கு மிகவும் விசுவாசமாக செயல்பட்டார்கள், ஆனால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக கோச்சிங் செய்த மைக் ஹெசன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை” என்று கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து டூரில் பாகிஸ்தான் டீம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதுடன், ஒழுங்கீன நடவடிக்கைகள் காரணமாக ஏழு பிளேயர்கள் ஹோம் அனுப்பப்பட்டு மிகப்பெரிய கிரிசிஸ் உருவாகியிருக்கும் இந்த சூழ்நிலையில் முன்னாள் பிளேயரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது.