டி20 உலககோப்பை ஆப்கான் கூட தோற்றோம்.. ஆனா தோல்விக்கு இந்தியாவுக்காக நடந்த தப்புதான் காரணம் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

0
819
Starc

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. குறிப்பிட்ட இந்த போட்டியில் மிட்சல் ஸ்டார்க் விளையாட வைக்கப்படவில்லை. அந்த இடத்தில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகர் விளையாட வைக்கப்பட்டார். தற்பொழுது அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா எடுத்த முடிவுகள் குறித்து மிட்சல் ஸ்டார்க் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் ஸ்டார் விளையாட வைக்கப்படவில்லை. அந்த உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் முதல் சுற்றில் வெளியேறியது.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டார்க் இடத்தில் விளையாடிய ஆஸ்டன் அகர் சிக்கனமாக பந்து வீசி இருந்த போதிலும் கூட விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. மேலும் அவர் பேட்டிங் பங்களிப்பு தருவார் என்கின்ற நிலையில் பேட்டிங்கிலும் நன்றாக விளையாடவில்லை.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் மிச்சல் ஸ்டார்க் கூறும்பொழுது “தொடர்ந்து இரண்டு டி20 உலக கோப்பைகளாக நான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வைக்கப்படவில்லை. இது மேட்ச் அப் சம்பந்தமான ஒன்று. செயின்ட் வின்சென்ட் ஆடுகளத்தில் கண்டிஷன் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதை எங்கள் நிர்வாகம் பார்த்தது. எனவே அகர் தாக்கத்தை உருவாக்க முடியும் என்று நினைத்தார்கள். அவரும் சிறப்பாகவே பந்து வீசியதாக செய்ததாக நினைக்கிறேன். அவர்கள் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடினார்கள் அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது வசதியாக அமைந்து விட்டது.

நாங்கள் இங்கிலாந்தை விட மிகச் சிறப்பாக முன்னேறி முதல் சுற்றை முடித்தோம். அடுத்து இரண்டாவது சுற்று முதல் போட்டியிலும் வெற்றி பெற்று சிறப்பான நிலையில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து நிலைமைகள் மாறி வித்தியாசமான பட்டியலுக்குள் வந்து விட்டோம். வெஸ்ட் இண்டீஸ் முழுவதும் சுற்றி விளையாடுவது மிகவும் கடினம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மகத்தான முதல் சாதனை.. பாகிஸ்தான் வாய்ப்பை பறித்தது.. தொடரும் ஆதிக்கம்

எங்களுக்கு இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு போட்டிகள் இரவில் இருந்தது. மூன்றாவது போட்டி பகலில் இந்தியாவுடன் நடந்தது.அது எங்களுக்கு சரியானதாக இல்லை. அந்தப் போட்டிக்கு எங்களுக்கு செயின்ட் வின்சென்டில் இருந்து விமானம் தாமதமாக புறப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு 90 நிமிட பயணம் இருந்தது. நாங்கள் போய் சேரவே மணி கிட்டத்தட்ட 10 ஆகிவிட்டது. இது எங்களை பாதித்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.