அண்டர் 19 மேட்ச்க்கும் ஐபிஎல் மேட்ச்க்கும் வித்தியாசம் புரியுதா தம்பி? – 17 வயது மபாகா பற்றி ஸ்டெயின்

0
758
Steyn

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அடிக்கும் மோதிக்கொண்ட போட்டியில் மொத்தம் சேர்த்து 523 ரன்கள் வந்தது. ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்னாக இந்தப் போட்டி அமைந்திருக்கிறது.

மேலும் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் எடுத்தது. இதுவரையில் ஆர்சிபி அணி 263 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. இதை நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முறியடித்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் கிளாஸன் மூன்று பேரும் 200 ஸ்ட்ரைக்ரேட் மேல் வைத்து அரைசதம் அடித்தார்கள். இதுவே அந்த அணி இந்த ஸ்கோரை ஏற்றுவதற்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணிக்கு விளையாடும் 17 வயதான க்வேனா மபாகாவுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சிறுவருக்கு முதல் போட்டியே சோகமாக அமைந்தது. மொத்தம் நான்கு ஓவர்களில் அவர் 66 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் அறிமுக போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் கொடுத்த அதிகபட்ச ரன்னாக இதுவும் பதிவானது.

இவர் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக வந்தார். மேலும் ஒரே அண்டர் 19 உலக கோப்பையில் மூன்று முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்கின்ற உலக சாதனையையும் படைத்து, தன்னுடைய வேகம் மற்றும் பவுன்சர், யார்கர் மூலம் எல்லோரது கவனத்தையும் திருப்பி இருந்தார்.

இவர் இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பற்றி பேசும்பொழுது “அவர் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் நான் அவரை விட சிறந்த பந்துவீச்சாளராக வருவேன்” என்று கூறியிருந்தார். மேலும் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் பற்றி பேசி இருந்த பொழுது “நான் அவரை பார்த்து வளர்ந்தேன் ஆனால் படிப்படியாக நான் என் வழியில் செயல்பட ஆரம்பித்தேன்” என்பதாகவும் கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிக்காக ஜெர்சி நம்பரை மாற்றிய சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி – அவரே வெளியிட்ட உணர்வுபூர்வமான காரணம்

இந்த நிலையில் இவர் நேற்றைய போட்டியில் 66 ரன்கள் கொடுத்து மோசமான சாதனை செய்திருக்கும் பொழுது, இவர் குறித்து ட்விட் செய்த டேல் ஸ்டெயின் ” இப்போது மபாகாவுக்கு அண்டர் 19 போட்டிகளுக்கும், தொழில் முறையான ஐபிஎல் மாதிரியான போட்டிகளுக்கும் வித்தியாசம் புரிந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். நேற்றைய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தது. அங்கு அனுபவ வீரர்களே ரன்கள் தந்தார்கள். எனவே இந்த சிறுவர் ரன்கள் தந்தது பெரிய பிரச்சனை இல்லை என்பது முக்கியம்!