ஷாகின் ஷா அப்ரிடிக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் பயப்பட மாட்டார்கள் – பாகிஸ்தான் வீரர் அதிரடி கருத்து!

0
1945
Asia cup

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறுவதற்கு பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியும் மிக முக்கியமான காரணமாக அமைந்தார்கள்!

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா கேஎல் ராகுலை ஷாகின் சா அப்ரிடி கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். அவரது அபாரமான இன்ஸ்விங் வேகப்பந்து வீச்சில் ஸ்டம்புகள் சிதற இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் பரிதாபமாக பெவிலியன் திரும்பினார்கள். மேலும் அந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அப்போதைய இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை ஷார்ட் பாலில் ஷாகின் ஷா அபிரிடி வெளியேற்றினார். இந்திய அணியின் தோல்விக்கு இது மிக முக்கியக் காரணமாக அமைந்தது!

- Advertisement -

தற்போது டி20 உலகக் கோப்பை போட்டி செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியையே எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இவருக்கு முன்பாக இந்திய அணி ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில் தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் அணியை முதலில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாகின் ஷா அப்ரிடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியின் ஷாகின் ஷா அப்ரிடி பந்துவீச்சை கண்டு பயப்பட மாட்டார்கள் என்று அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக அவர் கூறும் பொழுது ” ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள். அவர்கள் ஷா அப்ரிடி பந்தை புல்லென்த்தில் உள்நோக்கி ஸ்விங் செய்வார் என்று அறிந்திருப்பார்கள். அவரது பந்து வீச்சில் கால்களைக் கொண்டு கமிட் ஆகாமல், பேட்டை உடலோடு வைத்து ஆடுவது சரியானதாக இருக்கும். சூரியகுமார் ஸ்கொயர் லெக்கில் ப்ளிக் ஷாட் ஆடுவதும் முக்கியமானது” என்று தெரிவித்தார்!

மேலும் அவர் தினேஷ் கார்த்திக் பற்றி கூறும் பொழுது ” தினேஷ் கார்த்திக் ஆசிய கோப்பை தாண்டி அடுத்து வரும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இருப்பாரா என்று தெரியாது. அப்படி அவர் டி20 உலக கோப்பையில் இருந்தால், அதுவே அவருக்கு கடைசி உலகக்கோப்பை தொடராகவும் இருக்கும்” என்றும் கூறியிருக்கிறார்!