இலங்கை, ஜிம்பாப்வே டாப்… 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபம்! – உலகக்கோப்பை குவாலிபயர் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய டாப் 6 அணிகள் எவை?

0
5381

உலகக்கோப்பை குவாலிபயர் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் டாப்பில் முன்னேறியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாப நிலையில் உள்ளது.

இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் எட்டு அணிகள் உறுதியாகிவிட்டன மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு உலகக்கோப்பை குவாலிபயர் சுற்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த இரண்டு இடங்களுக்கு மொத்தம் பத்து அணிகள் குவாலிபயர் சுற்றில் பங்கேற்கின்றன. தலா ஐந்து அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து லீக் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

தங்களது குரூப்பில் முதலிடம் பிடித்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிக்கு நான்கு புள்ளிகள் போனஸாக கிடைக்கும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 புள்ளிகள் போனஸாக கிடைக்கும். மூன்றாவது இடம் பிடிக்கும் அணி புள்ளிகள் ஏதும் இன்றி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இருக்கு முன்னேறும்.

அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் 4 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணி நான்கு புள்ளிகளை போனஸ் ஆக பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் இரண்டாவது இடம் பிடித்த நெதர்லாந்து அணி இரண்டு புள்ளிகள் போனஸாக சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று நான்கு புள்ளிகளுடன் போனஸ் புள்ளி எதுவும் இல்லாமல் சூப்பர் சிக்ஸ் இருக்கும் முன்னேறியுள்ளது. குரூப் ஏ பிரிவில் மீதம் இருக்கும் நேபாளம் மற்றும் அமெரிக்கா இரண்டு அணிகளும் குவாலிபயர் சுற்றை விட்டு வெளியேறி உள்ளன.

குரூப் பி பிரிவில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் நான்கு புள்ளிகள் போனஸாக பெற்றிருக்கிறது. ஸ்காட்லாந்து அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும் இரண்டு புள்ளிகள் போனஸாக பெற்றிருக்கிறது. ஓமன் அணி 4 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் மூன்றாம் இடம் பிடித்து போனஸ் புள்ளிகள் எதுவும் பெறாமல் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னெறியுள்ள அணிகள்:

  1. இலங்கை
  2. ஜிம்பாப்வே
  3. ஸ்காட்லாந்து
  4. நெதர்லாந்து
  5. வெஸ்ட் இண்டீஸ்
  6. ஓமன்

உலகக்கோப்பை குவாலிபயர் சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் வருகிற ஜூன் 29ஆம் தேதி நடைபெறுகிறது. ஜிம்பாப்வே மற்றும் இலங்கை தலா 4 புள்ளிகள், ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகள், ஓமன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் புள்ளிகள் இன்றி சூப்பர் சிக்ஸ் சுற்றில் இருக்கின்றன.