கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

CWC புள்ளி பட்டியல்.. ஆப்கான் வெற்றி.. கடைசி 10-வது இடத்தில் ஆஸி.. அதிரடி மாற்றங்கள்!

நடப்பு உலக கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தை நியூசிலாந்து வீழ்த்தியதுமே, அரை இறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் யார் என்பதில் பெரிய மாற்றங்கள் உருவாக ஆரம்பித்து விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோற்று அடுத்து தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்க, அரையிறுதிக்கான சுவாரசியம் இன்னும் அதிகமாகி விட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி இடம் தோற்றத்தோடு இல்லாமல், சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் இன்று தோற்று இருக்கின்ற காரணத்தினால், அரை இறுதிக்கான முதல் நான்கு இடங்கள் யாருக்கு என்பதில் பெரிய திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி பெரிய அணிகளான நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளை எதிர் கொள்ள வேண்டும். இதில் குறைந்தபட்சம் இரண்டு பெரிய அணிகளை வெல்ல வேண்டும், அதே சமயத்தில் சிறிய அணிகளுடன் நல்ல ரன் ரேட் பெற வேண்டும்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால் ஆஸ்திரேலியா அணிக்கு சிறிது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.

அதே வேளையில் இங்கிலாந்து அணி அடுத்து சந்திக்க இருக்கின்ற பெரிய அணிகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளில் 3 அணிகளில் வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்துக்குதான் பெரிய தலைவலி நிலவுகிறது.

இந்த நிலையில் சந்தித்த மூன்று போட்டிகளில் இரண்டு பெரிய அணிகளை வென்று ஒரு சிறிய அணியும் வென்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் மிகவும் வலிமையாக இருந்து வருகிறது.

நியூசிலாந்து அணி மோதிய மூன்று போட்டிகளில், ஒரு பெரிய அணி, இரண்டு சிறிய அணிகள் என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் ஒரு சிறிய அணி, ஒரு பெரிய அணியை வென்று, புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் இந்தியாவுடன் தோற்று, இரண்டு சிறிய அணிகளுடன் வென்று தற்காலிகமாக நான்காம் இடத்தில் இருக்கிறது.

இந்த நான்கு அணிகள் முதல் நான்கு இடத்தில் இருக்க, இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் ஒரு சிறிய அணியுடன் வென்று, இரண்டு புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி மூன்றில் ஒரு போட்டியை வென்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதைப்போலவே ஒரு போட்டியை வென்ற பங்களாதேஷ் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

ஒரு போட்டியையும் வெல்லாமல் மூன்று அணிகள் இருக்கின்றன. அதில் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை எட்டாவது இடத்திலும், நெதர்லாந்து ஒன்பதாவது இடத்திலும் இருந்து வருகிறது.

இதில் மிகவும் ஆச்சரியப்படத்தக்க அதே சமயத்தில் அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு விஷயமாக, ஆஸ்திரேலியா அணி தற்போது ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் எதுவும் பெறாமல், புள்ளி பட்டியலில் கடைசியில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. நாளை இலங்கைக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் இதுமாறும்!

இந்தப் புள்ளி பட்டியலில் ஒரு சுவாரசிய விசயமாக, தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியையும், நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியையும் அடுத்து வெல்லும் என்றால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறாமல் போக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by