CWC புள்ளி பட்டியல்.. 4 இடம் முந்திய ஆப்கான்.. கடைசியில் இங்கிலாந்து.. முதல் 4 இடத்தில் யார் ?.. முழு விவரம்!

0
8749
WC

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.

கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதற்கு அடுத்து நெதர்லாந்து அணி சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

- Advertisement -

இந்த இரண்டு சிறிய அணிகளின் பெரிய அணிகளுக்கு எதிரான வெற்றிகள் உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியதோடு, அரையிறுதிக்கான அணிகளின் வாய்ப்புகளிலும் நிறைய மாற்றங்களை உண்டாக்கியது.

இதற்கு அடுத்து நேற்று இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடையாத இரண்டு அணிகளான நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிய போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற வெற்றியின் காரணமாக, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்திய அணி ஐந்து ஆட்டங்களில் ஐந்து வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து நியூசிலாந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் உடன் 6 புள்ளிகள் எடுத்து தென் ஆப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும், நான்கு ஆட்டத்தில் இரண்டு வெற்றிகள் உடன் 4 புள்ளிகள் எடுத்து ஆஸ்திரேலியா நான்காவது இடத்திலும் இருக்கிறது.

பாகிஸ்தான அணி ஐந்து ஆட்டத்தில் இரண்டு வெற்றிகள் உடன் 4 புள்ளிகள் எடுத்து ஐந்தாவது இடத்திலும், இதேபோல் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் 4 புள்ளிகள் எடுத்து ஆப்கானிஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் ஆறாவது இடத்திலும் இருக்கிறது.

பங்களாதேஷ், நெதர்லாந்து, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்று 2 புள்ளிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில், அடுத்த நான்கு இடங்களில் வரிசையாக இருக்கின்றன.

இந்த உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் முதல் நான்கு இடங்களில் இருக்கும் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளே அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!