உலக கோப்பை இலங்கை அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர்கள் இல்லை.. மூத்த வீரர்கள் புறக்கணிப்பு.. அதிரடி மாற்றங்கள்!

0
7256
Srilanka

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது!

இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் நாளை விளையாடி, நாளை மறுநாள் 28ஆம் தேதி உலகக்கோப்பை இறுதி அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை 1996 ஆம் ஆண்டு ஒருமுறை வென்றுள்ள இலங்கை அணி தன்னுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை சற்றுமுன் வெளியிட்டு இருக்கிறது.

கடந்த வாரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் பெரிய பூகம்பங்களை உருவாக்கியது.

பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் படுதோல்விகளை சந்தித்து வெளியேறியது அந்த அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து இருக்கிறது.

- Advertisement -

இதேபோல் இலங்கை அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 50 ரன்கள் சுருண்டு படுதோல்வி அடைந்தது, அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய விமர்சனத்தை உருவாக்கியது. இதன் காரணமாக கேப்டன் டசன் சனகாவை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று, பலத்த குரல்கள் எழுந்தது. மேலும் அணிக்கு அனுபவ வீரர்களை கொண்டு வர வேண்டும் என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் என இரண்டு அனுபவ மூத்த வீரர்களுக்கும் அணியில் இடம் தரப்படவில்லை.

மேலும் இலங்கை அணியின் கேப்டனாக டசன் சனகா தொடர்கிறார். துணை கேப்டனாக குசால் மெண்டிஸ் இருக்கிறார். மேலும் ஆசியக் கோப்பையில் பங்கேற்காத நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா காயம் சரியாகாததால் அணிக்கு திரும்பவில்லை. மேலும் வேகப்பந்துவீச்சாளர் சமீராவும் திரும்பவில்லை. லகிரு குமாரா மட்டுமே காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இலங்கை அணி :

தசுன் ஷனகா (கே) குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிசங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷன் ஹேமந்த, மஹீஷ தீக்ஷனா, துனித் வெல்லலகே, கசுன் ராஜிதா, மதீஷா பத்திரனா, லகிரு குமார, தில்ஷன் மதுஷங்க. ரிசர்வ் வீரர்: சாமிக்க கருணாரத்ன.