“கம்மின்ஸ் டீம்லயே இருக்க கூடாது.. அடுத்தவங்கள குறை சொல்ற ஆஸி லெஜெண்ட்ஸ் இப்ப என்ன பண்ண போறாங்க?” – கம்பீர் கடுமையான தாக்குதல்!

0
500
Gambhir

நேற்று ஆஸ்திரேலியா அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை ஆஸ்திரேலிய அணியை மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியா அணியின் செயல்பாடு மீதாக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய லெஜன்ட் கேப்டன் மார் டைலர் கூறும் பொழுது ஆஸ்திரேலியா அணி தனக்கான அணி எது என்பதையே இன்னும் கண்டறியவில்லை என்பதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

மேலும் மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலியா அணி எந்த நேரத்திலும் வீழ்வது போலவே விளையாடுகிறது அவர்களுக்கு விக்கெட்டை எடுக்கும் நோக்கமும் இல்லை ரன் அடிக்கும் நோக்கமும் இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்றாலும் கூட, அரை இறுதி எட்டுவதற்கு இந்த நிலையில் இருந்து கடுமையாக போராட வேண்டி இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறும் பொழுது “ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவதற்கு தகுதியற்றவராக நான் நினைக்கிறேன். கேமரூன் கிரீன் பேட்டிங் செய்ய முடியும் என்பதால் அவருடைய இடத்தில் அவரையே வைக்க வேண்டும்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்த வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இடம் பெறாமல் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் வீரராகவும் கேப்டனாகவும் இருக்க வேண்டும்.

ஆடம் ஜாம்பா மட்டுமே ஒரே சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். ஆஸ்திரேலியா சரியான திட்டத்துடன் உலக கோப்பைக்கு வரவில்லை. மற்ற அணிகளை பாருங்கள், அவர்கள் அணியில் மேட்ச் வின்னர் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களின் கருத்துக்களை இப்பொழுது பார்க்க விரும்புகிறேன். அவர்கள் மற்ற நாடுகளின் அணி தேர்வு குறித்து பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!