ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பயிற்சியாளரை மதித்து இருக்க மாட்டார் – மிட்செல் ஜான்சன் சரமாரி பேச்சு

0
943
Pat Cummins and Mitchell Johnson

ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடர் ஆக இந்த டி20 தொடர் விளையாட இருக்கிறது. இதைக் கடந்து ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை என்னவென்றால் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த அவமானகரமான சம்பவத்திற்கு பிறகு பயிற்சியாளராக பொறுப்பெடுத்து கொண்டவர் லாங்கர்.

அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது லாங்கரின் ஆஸ்திரேலிய அணி. கூடவே இதுவரை எட்டாக்கனியாக இருந்த டி20 உலகக் கோப்பையிலும் இவரது பயிற்சியின் மூலம் ஆஸ்திரேலிய அணி வென்றது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் 4-0 என்று ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இவரது பயிற்சியின் நடைபெற்ற ஒரே மோசமான விஷயம் என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக இரண்டு முறை தொடரை தோற்றது தான்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவராக வர்ணிக்கப்பட்ட லாங்கர் தற்போது ராஜினாமா செய்து கொண்டதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் புதிய கேப்டன் கம்மின்ஸ் புறப்படுகிறார். லாங்கர் பயிற்சியாளராக தொடர்வதில் இவருக்குத்தான் விருப்பமில்லை என்று பலரும் கருத்துக்களை கூறியுள்ளனர். தற்போது இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜான்சன் பேசும் போது சிறிது நாட்களுக்கு முன்பு கிரிக்கெட்டில் புனிதராக போற்றப்பட்டார் கம்மின்ஸ். களத்தில் இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் களத்திற்கு வெளியே இவரது செயல்பாடுகள் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. மேலும் கம்மின்ஸ் நினைத்திருந்தால் லாங்கரை மீண்டும் பயிற்சியாளராக தொடர வைத்திருக்கலாம். ஒரு முறை வாய்ப்பு கிடைத்தபோது அதை செய்ய மறுத்து உள்ளார் கம்மின்ஸ் என ஜான்சன் பேசியுள்ளார்.

கூடவே கம்மின்ஸ் தான் விரும்பும் பயிற்சியாளரிடம் கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அவருடைய சமீபத்திய பேட்டிகள் ஜஸ்டின் லாங்கரை மரியாதைக் குறைவாக நடத்துவது போல் இருக்கிறது என்றும் ஜான்சன் பேசியுள்ளார். புது பயிற்சியாளரின் கீழ் ஆஸ்திரேலிய அணி இலங்கை தொடரில் எப்படி செயல்படப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -