சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய லீக் ஆட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய லீக் ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது.
துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ஷாட் ஆட கடுமையாக தடுமாறுகிறார்கள். இதனால் குறைந்த இலக்கை துரத்துவது ஒவ்வொரு அணிக்கும் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணி 150 ரன்னில் சுருண்டு இருக்கும்.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் ஒரு மெகா தவறை செய்ததன் காரணமாக வங்கதேச அணி 35 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோரில் இருந்து 228 ரன்கள் என கௌரவமான இலக்கை எட்டியது. இதற்கு காரணம் அக்சர் பட்டேல் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த இருந்தபோது வங்கதேச வீரர் ஜேக்கர் அலி, அடித்த பந்தை கேப்டன் ரோகித் சர்மா கேட்ச் மிஸ் செய்தார்.
இதனால் ஹாட்ரிக் சாதனை பறிபோனது மட்டுமல்லாமல் ஜேக்கர் அலி 68 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று தவ்ஹீத் ஹிர்தாய் அடித்த கேட்ச் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா விட்டார். இதனால் அவர் சதம் அடித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்த போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றது.
கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களிலும், கில் சதமும் அடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி 22 ரன்களிலும் ஸ்ரேயாஸ் 15 ரன்களிலும் ஆட்டம் இழக்க கே எல் ராகுல் களத்தில் நின்று விளையாடி வந்தார். இந்த சூழலில் கே எல் ராகுல் அடித்த பந்தை ஜேக்கர் அலி கேட்ச் மிஸ் செய்தார். இதை பெவிலியனில் பார்த்த ரோகித் சர்மா வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் ரியாக்ஷன் கொடுத்தார்.
இதையும் படிங்க: கவனிக்க வைத்த இளம் வீரர்..100 ரன் 4 சாதனைகள்.. வலுவான இந்திய அணிக்கு எதிராக அபாரம்.. சாம்பியன்ஸ் டிராபி
அதாவது ஜேக்கர் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோகித் சர்மா விட, தற்போது அதே ஜேக்கர் அலி பில்டிங்கில் கேட்ச் மிஸ் செய்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அடைந்தது. ஒருவேளை கே எல் ராகுல் ஆட்டம் இழந்து இருந்தால் அதன் பிறகு கீழ் வரிசை வீரர்கள் தான் விளையாடி இருப்பார்கள். இதனால் வங்கதேசம் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.