கவனிக்க வைத்த இளம் வீரர்..100 ரன் 4 சாதனைகள்.. வலுவான இந்திய அணிக்கு எதிராக அபாரம்.. சாம்பியன்ஸ் டிராபி

0
651

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணி இக்கட்டான நிலையில் இருந்த போது வங்கதேச இளம் வீரர் சிறப்பாக விளையாடிய தனது அணியை மீட்டு எடுத்தார்.

அபாரமாக விளையாடி சதம் அடித்து வங்கதேச அணி சார்பாக சாதனை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் இதன் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதினர். இதில் தொடக்கத்திலேயே இந்திய அணி பங்களாதேஷ் அணியை 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறச் செய்ய, அதற்குப் பிறகு மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் டவ்ஹித் ஹரிதாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அற்புதமாக விளையாடியது.

ஒரு கட்டத்தில் 150 ரன்கள் தாண்டாது என்று இருந்த நிலையில் இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதில் ஜேக்கர் அலி 68 ரன்கள் குவிக்க மற்றொரு மிடில் வரிசை ஆட்டக்காரர் ஹரிதாய் 118 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 100 ரன்கள் குவித்து ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி இறுதியில் 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை நிர்ணயித்தது.

- Advertisement -

24 வயது இளம் வீரரான ஹரிதாய் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த 9வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிம் இக்பால் 128 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்திய நிலையில் அவருக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் ஒரு தொடக்க வீரர் அல்லாத ஆட்டக்காரர் 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்று இலக்க ரன்களை தொடுவது இது இரண்டாவது முறையாகும்.

இதையும் படிங்க:ரோஹித் என் ஹாட்ரிக் வாய்ப்பை வீணடிச்சப்போ.. இதைத்தான் நினைத்தேன்.. எதுவும் பேச முடியல – அக்சார் பட்டேல்

இதற்கு முன்னால் இந்திய அணியின் முகமது கைஃப் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 111 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆல் ரவுண்டர் ஷகிப் அல்ஹசனுக்கு பிறகு வங்கதேச அணிக்காக ஐந்தாவது இடத்தில் இறங்கி சதம் அடித்த இரண்டாவது வீரர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார். தற்போது இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -