சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த மினி ஏலத்தில் வாங்கப்பட்ட நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் ஆகியோர் காயத்தில் இருக்கிறார்கள்.
மேலும் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிக் கொண்டிருக்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே மற்றும் இந்திய வீரரான சிவம் துபே இருவரும் காயத்தில் இருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த முக்கிய வீரர்களின் காயம் சிஎஸ்கே அணிக்கு தலைவலியாக மாறியிருக்கிறது.
அதேசமயத்தில் கடந்த மினி ஏலத்தில் 8.40 கோடிக்கு அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய அணிக்கு விளையாடாத உள்நாட்டு வீரரான சமீர் ரிஸ்வி, உள்நாட்டில் நடைபெறும் 23 வயது க்கு உட்பட்டவர்களுக்கான சிகே நாயுடு டிராபியில் உத்திர பிரதேச அணிக்காக சௌராஷ்டிரா அணிக்கு எதிராக அதிரடியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார்.
இந்தத் தொடரில் தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் உத்தரபிரதேச அணியும் சௌராஷ்டிரா அணியும் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணிக்கு 20 வயதான வலது கை பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி 117 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 134 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது அதிரடியால் உத்தரப்பிரதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 426 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : “ஒரு நாளைக்கு 140 ஓவர்.. துருவ் ஜுரல் ஜெய்ஸ்வால் மாதிரிதான்” – ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்
உத்தரப்பிரதேச டி20 லீக்கில் இவர் அடித்த இரண்டு அதிரடி சதங்களை பார்த்தே இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் 8.40 கோடி கொடுத்து வாங்கியது. மேலும் இடது கையில் சுரேஷ் ரெய்னா எந்தப் பகுதிகளில் அடித்து விளையாடுவாரோ, அதே பகுதிகளில் அவரைப்போலவே வலது கையில் அடித்து விளையாட கூடிய வீரராக இவர் இருக்கிறார். எனவே இவரை வலதுகை சுரேஷ் ரெய்னா என எல்லோரும் குறிப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
One Three Four, Here comes the Roar! 🦁 🔥#ColCKNayuduTrophy pic.twitter.com/cwSMSTdLL1
— Chennai Super Kings (@ChennaiIPL) February 25, 2024