“ஒரு நாளைக்கு 140 ஓவர்.. துருவ் ஜுரல் ஜெய்ஸ்வால் மாதிரிதான்” – ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்

0
159
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டு வந்த விதம் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் இந்திய அணி நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது 149 பந்துகள் சந்தித்து விளையாடி 90 ரன்கள் எடுத்து இந்திய அணி 300 ரன்கள் கடப்பதற்கு உதவியாக இருந்தார்.

- Advertisement -

நேற்று முன்தினம் குல்தீப்பை வைத்துக்கொண்டு அன்றைய நாளில் விக்கெட் விடாமல் வெளியே வந்தார். மேலும் நேற்று தொடர்ந்து விளையாடி, இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய முன்னிலை கிடைப்பதில் இருந்து இந்திய அணியை காப்பாற்றினார்.

சூழ்நிலையைப் புரிந்து இன்னிங்ஸை மிக மெதுவாக ஆரம்பித்த அவர், எந்த நேரத்தில் எந்த பந்தை விட வேண்டும் அடிக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். விக்கெட்டை தரமாட்டேன் என்பதில் விடாப்பிடியாக விளையாடினார்.

- Advertisement -

மேலும் குல்தீப் ஆட்டம் இழந்த பிறகு, அடுத்து வந்த வீரர்களுக்கு ஓவரின் கடைசியில் பந்துகளை விளையாட கொடுத்து மிகச் சிறப்பாக அங்கிருந்து நகர்ந்து 50 ரன்கள் அடித்தார். அவருடைய பேட்டிங் திறமை மற்றும் கிரிக்கெட் அறிவு அவருக்கு நிறைய பாராட்டுகளை கொண்டு வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி எல்லோர் கவனத்தையும் ஈர்த்து இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து இந்திய அணிக்கு வந்து சிறப்பாக செயல்பட கூடியவராக இவர் இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக இருப்பவர் மும்பையை சேர்ந்த ஜூபின் பருச்சா. இவர் ஜெய்ஸ்வாலின் திறமை மேம்படுவதற்கும் முக்கியமான காரணமாக இருந்தவர். கடினமான பேட்டிங் பயிற்சிகளை தொடர்ந்து கொடுப்பவர். இவர்தான் துருவ் ஜுரலையும் பயிற்சி செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : “அடுத்து 100வது டெஸ்ட்.. ரோகித் உங்களை கேப்டனாக விடுவார்?” – கவாஸ்கருக்கு அஸ்வின் பதில்

அவர் துருவ் ஜுரல் பற்றி கூறும் பொழுது “அவர் கடந்த 18 மாதங்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். இந்திய அணியின் அறிமுகத்திற்கு முன்பாக அவர் ஒரு நாளைக்கு 140 ஓவர்கள் சந்தித்து விளையாடினார். இதில் நான்கு விதமான சுழல் பந்துவீச்சு ஆடுகளங்களில் தனிப்பட்ட பயிற்சிகளை எடுத்தார். இது பறக்க முடியாத ஒரு பயிற்சியாக அமைந்தது. இப்படியான கடினப் பயிற்சி ஜெய்ஸ்வால் செய்த பயிற்சி ஒப்பிட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -