வெறும் 4 கோடி போதும்.. தோனியை தக்க வைக்க சிஎஸ்கே அணிக்கு அடித்த லக்.. ஐபிஎல் 2025 ஏலம்

0
181
Ms dhoni and Csk

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வீரர்களின் தக்க வைப்பு விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான மகேந்திர சிங் தோனியை குறைந்த விலைக்கு தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பாக சிஎஸ்கேவிற்கு அமைந்துள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் தோனியின் வயது காரணமாக தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தோனியின் தரப்பில் இருந்து கூறப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் இந்த ஆண்டு ஒரு ஐபிஎல் அணி ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தேர்வை வழங்கியிருக்கிறது. அதில் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை அன் கேப்ட் பிளேயர்களாக வைத்துக் கொள்ளலாம். அதில் ஒரு வீரர் அன்கேப்டு பிளேயராக இருக்க வேண்டியது கட்டாயம். மீதமுள்ள நான்கு அல்லது ஐந்து வீரர்கள் இந்தியர்களாகவோ அல்லது வெளிநாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.

- Advertisement -

ஒரு ஐபிஎல் அணியை முதல் மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் 18, 14 மற்றும் 11 கோடி ரூபாய்களை இந்த மூன்று வீரர்களுக்கு முதலீடு செய்ய வேண்டி வரும். மேலும் கடைசி இரண்டு வீரர்களையும் தக்க வைக்க 18 மற்றும் 14 கோடிகளை ஒரு அணி இழக்கும் பட்சத்தில் ஐபிஎல் ஏலத்தில் 45 கோடி ரூபாயுடன் மற்ற வீரர்களை தேர்வு செய்ய ஏலத்தில் இறங்கும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வீரராக கருதப்படும் அன் கேப்டு பிளேயருக்கு சம்பளமாக ரூபாய் 4 கோடி ரூபாயை அதிகபட்சமாக ஐபிஎல் நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.

இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி அண்ட் கேப்டு பிளேயராக இருக்கும் பட்சத்தில் குறைந்த விலையான நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க:கிரிக்கெட்ல பல பேர்.. இந்த விஷயத்தை செய்யல.. 17 வருஷத்துல இவ்ளோ கேம் ஆட இது கண்டிப்பா வேணும் – ரோஹித் பேட்டி

அதன் மூலம் மகேந்திர சிங் தோனியை தவிர மற்ற திறமையான இளம் வீரர்களையும் சர்வதேச வீரர்களையும் வாங்குவதற்கு சிஎஸ்கேவிற்கு எந்த தடையும் ஏற்படாது. எனவே ஆறு வீரர்களை தக்கவைக்க அனுமதி அளித்த பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -