6 முறை சோகத்திற்கு புல் ஸ்டாப்.. சஞ்சு சாம்சன் ஓவர்டன் மேஜிக் ஆட்டம்.. சிஎஸ்கே அசத்தல் வெற்றிக்கு காரணம் என்ன?

0
23
CSK

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ரன் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் குல்ஜப்னித் சிங், டிவால்ட் பிரிவிஸ் மற்றும் அகேல் ஹுசைன் புதிதாக இடம் பெற்றார்கள்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் சதம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் மிக மெதுவாக விளையாடி 18 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இளம் வீரர் ஆயுஸ் மத்ரே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் அடித்து 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 115 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

- Advertisement -

முதல் வெற்றி

இதற்கு அடுத்து டெல்லி கேப்பிட்டல் அணிக்கு கேஎல்.ராகுல் 10 பந்தில் 18 ரன்கள், பதும் நிஷாங்கா 24 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து சமீர் ரிஸ்வி 9 பந்தில் 6 ரன், அக்சர் படேல் 2 பந்தில் 1 ரன், டேவிட் மில்லர் 14 பந்தில் 17 ரன், அசுத்தோஸ் சர்மா 10 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : முதல்ல நான் நினைச்சதே வேற.. அப்புறம் இந்த பிளானை மாத்தியதால்தான் சதம் அடிக்க முடிந்தது – சஞ்சு சாம்சன் பேச்சு

ஒரு முனையில் பயம் காட்டிய ஸ்டெப்ஸ் 38 பந்தில் 60 ரன்கள் எடுத்து வெளியேற டெல்லி 189 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே 23 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் சென்னை சேப்பாக்கத்தில் தொடர் ஆறு தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -