இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது குறித்து சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்க வேட்டக்காரராக வந்த சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.
உண்மை இதுதான்
இந்த சதம் குறித்து சஞ்சு சாம்சன் பேசும்போது “நீங்கள் எவ்வளவு நல்ல பார்மில் இருந்தாலும், நாட்டுக்காக எவ்வளவு போட்டிகளை வென்று இருந்தாலும், சில போட்டிகளை தோற்றதும் மனதில் சந்தேகங்கள் வருவது இயல்புதான். ஆனால் நான் எனது அடிப்படைகளை கவனிக்க வேண்டும். என்னை நம்ப வேண்டும். மேலும் முறைப்படி விளையாட வேண்டும்” என்று நினைத்தேன்.
“முதலில் ரன்கள் எடுக்காமல் இருந்த பொழுது என் கேம் ப்ளானை மாற்றிக் கொள்ளலாமா என்கின்ற எண்ணம் வந்தது. ஆனால் இதுவரை எது எனக்கு வேலை செய்ததோ அதை தொடர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுவே இன்று நல்ல பலன் கொடுத்தது”
ஆயுஸ் சிறந்த திறமைசாலி
” இன்றைய ஆடுகளம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கியூரேட்டருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தற்போது நாங்கள் எடுத்த ஸ்கோர் படி எங்களால் வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க : இன்னைக்கு எங்க வெற்றிக்கு காரணம் ஷஷான்க் சிங்தான்.. அவர்தான் என்கிட்ட அதை சொன்னார் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“ஆயுஸ் மிகச்சிறந்த இளம் திறமையான பேட்ஸ்மேன். அவருடன் இணைந்து விளையாட முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு ஒரு இலக்கை முடிவு செய்து விளையாட முடியாது. நீங்கள் செட்டாகிவிட்டால் தொடர்ந்து ரன் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று அப்படித்தான் விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.






