சிஎஸ்கே-வின் 942 நாட்கள் சோகம் முடிந்தது.. பஞ்சாப் அணியை சுருட்டி வெற்றி.. புள்ளி பட்டியலில் கிடு கிடு உயர்வு

0
6098
CSK

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட முக்கிய போட்டி நடைபெற்றது. குறைந்த ஸ்கோரை வைத்து சிஎஸ்கே சிறப்பான முறையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியிலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் தோற்க அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ரகானே 7 பந்துகளில் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ருதுராஜ் மற்றும் டேரில் மிச்சல் 37 பந்தில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ருதுராஜ் 21 பந்தில் 32 ரன்கள், சிவம் துபே கோல்டன் டக், டேரில் மிட்சல் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து மொயின் அலி 17(20), சான்ட்னர் 11(11), சர்துல் தாக்கூர் 17(11), தோனி கோல்டன் டக் என வெளியேறினார்கள். ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடி ஆட்டம் இழக்காமல் ரவீந்திர ஜடேஜா 26 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 167 ரன்கள் சேர்த்தது. ராகுல் சாகர் மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எல்லாமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜானி பேர்ஸ்டோ 7(6), ரூசோவ் 0(3), ஷஷாங்க் சிங் 27(20), பிரப்சிம்ரன் சிங் 30(27), சாம் கரன் 7(11), ஜிதேஷ் சர்மா 0(1), அசுதோஸ் சர்மா 3(10), ஹர்ஷல் படேல் 12(13), ராகுல் சாஹர் 16(10), ஹர்பரித் பிரார் 17(13), ரபாடா 11(10) ரன்கள் எடுக்க 20 ஓவர்களுக்கு பஞ்சாப் அணி ஒன்பது விக்கெட்டை இழந்து 139 ரன் எடுத்தது. 29 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் 942 நாட்கள் கழித்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை சிஎஸ்கே அணி வென்றிருக்கிறது.

தற்போது புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் அதிரடியாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. லக்னோ அணி நான்காவது இடத்திலும் ஹைதராபாத் அணி ஐந்தாவது இடத்திலும் தொடர்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் பந்தில் விக்கெட்.. ஆனால் தோனிக்காக ஹர்சல் படேல் செய்த விஷயம்.. புகழும் சிஎஸ்கே ரசிகர்கள்

சிஎஸ்கே அணிக்கு அடுத்து குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அன்னிக்கு எதிரான போட்டி இருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் சிஎஸ்கே அணி தன்னுடைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெரிய அளவில் பிரகாசமாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.