“சிஎஸ்கே இந்த 3 இந்திய வீரர்களுக்கு குறி வைக்கும்.. அதுல 2 பேரை கட்டாயம் வாங்கும்!” – முன்னாள் வீரர் வெளியிட்ட கணிப்பு!

0
13102
Dhoni

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் 2023 டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இரண்டு அணிகள் தங்களுக்கு இடையே வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 13 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த செயல்பாட்டை கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் எடுத்துக் கொண்டால், அவர்கள் நடப்பு ஐபிஎல் சாம்பியனாக இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை எட்டு வீரர்களை வெளியேற்றி இருந்தாலும் கூட, அவர்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் வலிமையான அணியாகவே இருக்கிறார்கள். ஏலத்திற்கு சென்று இரண்டு சரியான வீரர்களை மேற்கொண்டு வாங்க முடிந்தால் அவர்கள் இன்னும் பலமாக மாறுவார்கள்.

இது மட்டும் இல்லாமல் அவர்கள் கையில் 32 கோடி பணம் இருக்கிறது. எனவே நிச்சயம் அவர்கள் விரும்பிய இரண்டு வீரர்களை வாங்காமல் விடமாட்டார்கள். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எப்படி செல்கிறது என்கின்ற எதிர்பார்ப்பு நிறைய பேருக்கு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சென்னை சூப்பர் கிங்ஸ் தற்பொழுது இரண்டு துறைகளை கொஞ்சம் சரி செய்ய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று வேகப்பந்து வீச்சுத் துறை. அவர்களிடம் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களை தவிர இன்னும் ஒருவர் தேவை.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்காக இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லை வெளிநாட்டு வீரரிடம் செல்லலாம். அவர்கள் பொதுவாகவே அனுபவம் வாய்ந்தவர்களை நோக்கி நகர்வார்கள் என்பதால், சர்துல் தாகூரை ஏலத்தில் வாங்கினால் ஆச்சரியப்பட எதுவும் கிடையாது. அவர்களிடம் 32 கோடி பணம் இருக்கிறது. மேலும் இவர் ஏற்கனவே சென்னை அணியில் இருந்திருக்கிறார்.

தற்பொழுது சென்னைக்கு ஆல்ரவுண்டர் ஒருவர் தேவை. அது ரச்சின் ரவீந்திராவாக இருக்கலாம். இல்லை அவர்கள் டேரில் மிட்சல் இடம் செல்லலாம். அவர்களுக்குத் தேவையான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு அதில் செல்ல மாட்டார்கள்.

மேலும் அவர்களுக்கு அம்பதி ராயுடு இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் தேவை. எனவே அவர்கள் தோனியை தாண்டிச் சென்று, கருண் நாயர் மற்றும் மணிஷ் பாண்டே இருவரில் ஒருவரை வாங்குவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்!” என்று கூறியிருக்கிறார்!