சி எஸ் கே vs லக்னோ – இன்றைய ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர் யார்?

0
101

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்துகிறது. இன்றைய ஆட்டத்தில் யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த போகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

சென்னை அணி மோதிய முதல் ஆட்டத்தில் ருத்ராஜ்  கெய்க்வாட் அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்தார். எனினும் சிஎஸ்கே நிர்ணயித்த 179 ரன்களை குஜராத் அணி எளிதாக எட்டியது. இதேபோன்று லக்னோ அணி தங்களது முதல் ஆட்டத்தில் டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் எந்த வீரர் அதிக விக்கெட் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவி பிஸ்னாய் 31 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ரவி பிஸ்னாய் சிஎஸ்கே வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார். லெக் ஸ்பின்னர் என்பதால், அவருடைய பந்துவீச்சு நன்றாக கைக் கொடுக்கும். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்கக் கூடியவர் ஜடேஜா. சென்னையில் கடைசியாக விளையாடிய ரஞ்சிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த சீசனும் ஜடேஜா நல்ல பார்மில் இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா விக்கெட் வேட்டையில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிக்கக் கூடியவர் மார்க் வுட்டாக இருக்கலாம். மார்க் வுட் ஏற்கனவே சென்னை அணியில் இடம் பெற்றவர்.

இதனால் சேப்பாக்கம் மைதானம் எப்படி செயல்படும் என்று ஓரளவுக்கு தெரிந்திருக்கும். மேலும் அதி வேகமாக பந்து வீசி முதல் போட்டியிலே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் இவருடைய பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்வுட்டை  சமாளிப்பது சிஎஸ்கேவுக்கு தலைவலியாக இருக்கலாம். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக 160 ரன்கள் முதல் 180 ரன்கள் எடுத்தாலே இங்கு எளிதாக வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.