பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே ; ஈடன் கார்டனில் கொல்கத்தாவை சுலபமாக தோற்கடித்து முன்னேறியது சிஎஸ்கே!

0
991
CSK

இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் 16வது சீசனின் 33 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கான்வே-ருத்ராஜ் ஜோடி முதல் விக்கட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. ருதுராஜ் 35 ரண்களும், கான்வே 56 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரகானே மற்றும் சிவம் துபே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். சிவம் துபே 21 பந்தில் இரண்டு பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 8 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். மகேந்திர சிங் தோனி ஆட்டம் இழக்காமல் இரண்டு பந்தில் 3 ரன்கள் எடுத்தார். இறுதிவரை களத்தில் நின்ற ரகானே 29 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸ்ர்கள் உடன் 71 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் கெஜ்ரோலியா மூன்று ஓவர்கள் பந்துவீசி 44 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதலில் களம் இறங்கிய சுனில் நரைன் 0, நாராயணன் ஜெகதீசன் 1, வெங்கடேஷ் ஐயர் 20, நிதீஷ் ராணா 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து காயத்தால் தாமதமாக தளம் இறங்கிய ஜேசன் ராய் உடன் ரிங்கு சிங் கைகோர்க்க கொல்கத்தாவின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 19 பந்துகளில் அரை சதம் எடுத்து, 26 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்து வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரூ ரசல் 9, டேவிட் வீசா 1, உமேஷ் யாதவ் 4 ரன்களில் வெளியேறினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஏழு போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் ராஜஸ்தான் 8 புள்ளிகள் உடன் இருக்கிறது!